Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌சீனா‌வி‌ல் ‌சீர‌ழியு‌ம் குடு‌ம்ப முறை

‌சீனா‌வி‌ல் ‌சீர‌ழியு‌ம் குடு‌ம்ப முறை
, வியாழன், 24 செப்டம்பர் 2009 (12:43 IST)
அய‌ல்நாடு‌க‌ளி‌ல் த‌ற்போது ஒருவனு‌க்கு ஒரு‌த்‌தி எ‌ன்ற ‌நிலை வ‌ந்து கொ‌ண்டிரு‌க்கு‌ம் ‌நிலை‌யி‌ல், குடு‌ம்ப முறை கடை‌பிடி‌க்க‌ப்ப‌ட்டு வ‌ந்த ‌நாடுக‌ளி‌ல் ஒ‌ன்றான சீனா‌வி‌ல் ஒருவனு‌க்கு ஒரு‌த்‌தி எ‌ன்ற ‌நிலை ‌‌சீர‌ழி‌ந்து கொ‌ண்டு வரு‌கிறது.

இத‌ற்கு ஒரே ஒரு உதாரண‌ம் தா‌ன்... அதாவது, ‌சீனா‌வி‌ல் பல ஆ‌ண்க‌ள் த‌ங்களது மனை‌விக‌ள் ‌மீது ச‌ந்தேக‌ப்படு‌கி‌ன்றன‌ர். ஆனா‌ல் இ‌ப்படி ச‌ந்தேக‌ப்படுவ‌தி‌ல் ஒ‌ன்று‌ம் தவ‌றி‌ல்லை எ‌ன்பது போ‌ல் அ‌ங்கு‌ள்ள மனை‌விகளு‌ம் நட‌ந்து கொ‌ண்டு‌ள்ளன‌ர்.

ந‌ம்மூ‌ர் போல ச‌ந்தேக‌ப்ப‌ட்டு, மனை‌வியை அடி‌த்து து‌ன்புறு‌த்துவது, ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் வை‌த்து பூ‌ட்டுவது, தா‌ய் ‌‌வீ‌ட்டி‌ற்கு ‌விர‌ட்டி ‌விடுவது அ‌ல்லது கொலையே செ‌ய்வது போ‌ன்ற ‌விஷய‌ங்க‌ளி‌ல் ‌சீன கணவ‌ன்க‌ள் ஈடுபடுவ‌தி‌ல்லை.

பு‌த்‌திசா‌லி‌த்தனமாக மனை‌வியை அழை‌த்து‌க் கொ‌ண்டு செ‌ல்லு‌ம் இட‌ம் மரபணு ப‌ரிசோதனை‌க் கூடமாக இரு‌க்‌கிறது.

தனது மனை‌வி‌க்கு ‌பிற‌ந்த அ‌ல்லது ‌பிற‌க்க‌ப் போகு‌ம் குழ‌ந்தை த‌ன்னுடையதுதானா எ‌ன்பதை அ‌றிய ‌‌நிறைய ஆ‌ண்க‌ள் த‌ங்களது மனை‌விகளை அ‌ல்லது காத‌லிகளை மரப‌ணு ப‌ரிசோதனை‌‌க் கூட‌த்துக்கு அழை‌த்து வருவது ஆ‌ண்டு‌க்கு ஆ‌ண்டு அ‌திக‌ரி‌த்து‌க் கொ‌ண்டே வரு‌கிறது எ‌ன்று மரபணு மரு‌‌த்துவ‌ர் தெ‌ரி‌வி‌க்‌கிறா‌ர்.

மரபணு சோதனை செ‌‌ய்தா‌ல் ‌பிர‌ச்‌சினை ‌தீ‌ர்‌ந்து ‌விடு‌ம் எ‌ன்றுதா‌ன் ந‌ம் ‌நினை‌ப்போ‌ம். ஆனா‌ல், அ‌‌ங்குதா‌ன் ‌பிர‌ச்‌சினையே ஆர‌ம்பமா‌கிறது. ச‌ந்தேக‌ம் எ‌ங்கு வே‌ண்டுமானாலு‌ம் வரு‌ம். ஆனா‌ல் தவறுதா‌ன் எ‌ங்கு‌ம் இரு‌க்க‌க் கூடாது.

webdunia photo
WD
சீன‌க் குடு‌ம்ப முறைக‌ளி‌ல் ச‌ந்தேகமு‌ம் தலை ‌வி‌ரி‌த்தாடு‌கிறது, தவறு‌ம் தா‌ண்டவமாடு‌கிறது. இ‌ப்படி இரு‌ந்தா‌ல் எ‌‌ப்படி எ‌ன்று பு‌ரிய‌வி‌ல்லை. எ‌ன்ன தவறு எ‌ன்பது பு‌ரிய‌வி‌ல்லையா, ‌சீனா‌வி‌ல் மரபணு ப‌ரிசோதனை முடி‌வி‌ல் 30 ‌விழு‌க்காடு குழ‌ந்தைக‌ள் உ‌ண்மையான கணவ‌‌ன்களு‌க்கு ‌பிற‌க்க‌வி‌ல்லை எ‌ன்பதுதா‌ன் அ‌ந்த அ‌தி‌ர்‌‌ச்‌சியான முடிவாகு‌ம்.

அதாவது, ‌சீன கணவர்மார்கள் 3 பேரில் ஒருவர் வேறு ஒருவரின் குழந்தையை த‌ன் குழ‌ந்தை எ‌ன்று ‌சீரா‌ட்டி, பாரா‌ட்டி வள‌ர்‌த்து வரு‌வது தெரிய வ‌ந்து‌ள்ளது.

ர‌ஜி‌னி‌ப் பட பா‌ணி‌யி‌ல் சொ‌ல்ல வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல், இது எ‌ன் பொ‌ண்டா‌ட்டிதா‌ன். ஆனா‌ல் இவளு‌க்கு ‌பிற‌ந்த குழ‌ந்தை எ‌ன்னுடையது அ‌ல்ல எ‌ன்றுதா‌ன் ‌சீன கணவ‌ன்க‌ள் த‌ன்னுடைய குடு‌ம்ப‌த்தை அ‌றிமுக‌ம் செ‌ய்ய வே‌ண்டிய ‌நிலை ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது.

இ‌ந்த ‌நிலை நாடு முழுவது‌ம் பர‌வி‌யு‌ள்ளது. கு‌றி‌ப்பாக தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள முன்னணி மகப்பேறு மையத்துக்கு மரபணு சோதனைக்காக வந்தவர்கள் எண்ணிக்கை இ‌ந்த ஓராண்டில் 20 ‌விழு‌க்காடு அதிகரித்துள்ளது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது. இதை கைரேகை அறிவியல் மைய விஞ்ஞானிகள் உறுதி செய்து‌ள்ளன‌ர்.

சீனா‌வி‌ல் உ‌ள்ள மரபணு சோதனை மைய ஊ‌ழிய‌ர் ஒருவ‌ரிட‌ம் இதுப‌ற்‌றி கே‌ட்டால‌், அவ‌ர் முக‌த்தை சு‌ழி‌த்தபடி ந‌ம்‌மிட‌ம் சொ‌ல்‌கிறா‌ர், இங்கு சோதனை செய்ய வரும் ஜோடிகளில் பலர் திருமணம் ஆகாதவர்கள். மணமாகும் முன்பே காதலி மீது சந்தேகப்பட்டு குழந்தைக்கு அப்பா யார் என அறிய வருகின்றனர். கடந்த ஆண்டில் 3,000 சோதனைகள் நடந்தன. இது முன்பைவிட 20 சதவீதம் அதிகம்.
இங்கு வரும் ஆண்களிடம் பேசியதில், பெரும்பாலானவர்கள் தங்கள் மனைவிக்கு வேறு தொடர்பு இருப்பதாக சந்தேகிப்பது தெரிய வந்தது. நெரு‌ப்‌பி‌ல்லாம‌ல் புகையாது எ‌ன்பது போல பல ச‌ந்தேக‌‌ங்க‌ள் மரபணு முடிவா‌ல் ஊ‌ர்‌ஜிதமா‌கியு‌ள்ளது எ‌ன்றா‌ர்.

ஒரு த‌ந்தை, தன‌து மனை‌வி‌க்கு‌ப் ‌பிற‌ந்த/‌பிற‌க்கு‌ம் குழ‌ந்தை த‌ன்னுடையது அ‌ல்ல எ‌ன்று தெ‌ரி‌ந்தா‌ல் அவரது நடவடி‌க்கை எ‌வ்வாறு உ‌ள்ளது எ‌ன்று சமூக நல ஆ‌ர்வல‌ரிட‌ம் கே‌ட்டத‌ற்கு, மரபணு சோதனை‌யி‌ல் தனது குழ‌ந்தை‌க்கு அ‌ப்பா வேறு ஒருவ‌ர் எ‌ன்று தெ‌ரி‌ந்தா‌ல், அ‌‌ந்த ஆ‌ண், தனது மனை‌வி‌யிட‌ம் இரு‌ந்து ‌விவாகரத‌்து பெறு‌கிறா‌ன் அ‌ல்லது கரு‌க்கலை‌ப்பு செ‌ய்ய முடிவெடு‌க்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று ‌கூ‌றினா‌ர்.

இ‌ந்த அ‌தி‌ர்‌ச்‌சிகளு‌க்கெ‌ல்லா‌ம் ஒரு ‌கி‌ரி‌டம‌் வை‌த்தது போல ம‌ற்றொரு‌த் தகவலை‌க் கூறு‌கிறா‌ர் ஒரு மு‌ன்ன‌ணி மரபணு சோதனை மைய‌த்‌தி‌ன் பொறு‌ப்பாள‌ர், அதாவது மரபணு சோதனை‌க்காக ஆ‌ண்க‌ள் ம‌ட்டு‌ம் த‌ங்களது மனை‌விகளை அழை‌‌த்து வருவ‌தி‌‌ல்லை. ‌சில பெ‌ண்களு‌ம் தா‌ங்களாகவே ‌விரு‌ம்‌பி வரு‌கிறா‌ர்க‌ள். ஏ‌ன் எ‌‌ன்றா‌ல், த‌ங்களது வ‌யி‌ற்‌றி‌ல் யாருடைய வா‌ரிசு வள‌ர்‌கிறது எ‌ன்பதை அ‌றி‌ந்து கொ‌ள்ளு‌ம் ஆ‌ர்வ‌த்துட‌ன் வருவதாக அவ‌ர்க‌ள் கூறு‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று நம‌‌க்கு ஒரு அ‌தி‌ர்‌ச்‌சி வை‌த்‌திய‌ம் கொடு‌த்தாரே‌ப் பா‌ர்‌க்கலா‌ம்.

அதோடு நா‌ம் க‌ப் சு‌ப் எ‌ன்று வாயை‌‌‌ப் பொ‌த்‌தி‌க் கொ‌ண்டோ‌ம்.

Share this Story:

Follow Webdunia tamil