Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜாதி... மதம்... என்ற நீளத்தை தாண்ட முடியுமா?

ஜாதி... மதம்... என்ற நீளத்தை தாண்ட முடியுமா?
, செவ்வாய், 30 ஜூன் 2009 (16:30 IST)
முதல் பார்வையிலேயே ஒருவருக்குக் காதல் வரலாம். தொடர்ந்து அவரது நடவடிக்கைகளைக் கவனித்து வந்தால் அவர் மீதான காதல் அதிகரிக்கலாம் அல்லது குறையலாம் அல்லது முற்றிலுமாக முடிந்து போகலாம்.

ஆனால், நாம் ஒருவரைப் பார்த்து காதலிக்க ஆரம்பித்ததும், அவரது குணம், குலம், ஜாதி, மதம் போன்றவற்றை ஆராய்ந்து தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.

webdunia photoWD
இது யாருக்கு சொல்வது என்றால், தனது ஜாதியையோ, மதத்தையோ விட்டுக் கொடுக்க முன் வராதவர்களுக்காக சொல்லப்படவது. ஏனென்றால் நீங்கள் காதலிக்கும் பெண் அல்லது ஆண் வேறு மதத்தைச் சார்ந்தவராக இருப்பின், உங்கள் காதலுக்குக் குறுக்கே மதம் மட்டுமே எதிரியாக நிற்பின் நீங்கள் அதனிடம் தோற்கும் நிலை ஏற்படலாம்.

எனவே, எனது ஜாதிதான் முக்கியம், எனது அந்தஸ்துதான் முக்கியம் என்று நினைப்பவர்கள், நீங்கள் காதலிக்கும் பெண்ணின் ஜாதி, மதம், அந்தஸ்து போன்றவற்றை தெரிந்து கொள்வது நல்லது.

சரி, வேறு மதம் என்று தெரிய வந்தால் என்ன செய்வது என்று கேட்காதீர்கள். உடனடியாக உங்களுக்கு காதல் முக்கியமா, உங்கள் மதம் முக்கியமா என்பதை முடிவு செய்யுங்கள். அப்படி மதத்தை விட்டுக் கொடுக்க முடியாது என்று முடிவெடுத்துவிட்டீர்களானால், உடனடியாக உங்கள் காதலை முடித்துக் கொள்ளுங்கள்.

நாம் காதலிக்கத் துவங்கியதும் (காதலை வெளிப்படுத்துவதற்கு முன்பு) நமது சிந்தனைகளை தீவிரமாக செயல்படுத்தி, நாம் விரும்புபவர்களுடைய மனநிலை, குடும்ப இயல்புகளை அறிந்து கொள்ள வேண்டும்.

webdunia
webdunia photoWD
பொதுவாக காதலுக்கு முன்பு ஜாதி, மதம், உறவுகள் என எதுவுமே கு‌று‌க்கே வராது. ஆனா‌ல் காத‌லி‌ன் மு‌க்‌கிய‌க் க‌ட்டமான க‌ல்யாண‌த்‌தி‌‌ற்கு பலவும் குறுக்கே வந்து நிற்கும். ஆனால், அதையெல்லாம் எதிர்த்து நிற்கும் துணிவு காதலிப்பவருக்கு மிக அவசியம். இருவருக்குமே இது பொருந்தும்.

மதத்தின் மீது மிகுந்த பற்றுக் கொண்டவ‌ர் அ‌ல்லது சிலருக்கு மத வழிகாட்டியாக இருப்பவர், வேறு ஒரு மதத்தைச் சார்ந்தவரை காதலித்து மணம் புரிந்து கொள்ள முடியுமா என்பதை சிந்திக்க வேண்டும்.

காதலிப்பவருக்காக மதத்தினை தூக்கி எறிய முடியும் அல்லது காதலுக்காக மதம் மாறவும் தயார் என்ற மனநிலையில் இருப்பவர்கள்தான் வேற்று மத பெண்கள் மீது காதல் பார்வை செலுத்தத் தகுதி படைத்தவர்கள்.

காதலுக்காக மதத்தினை விட்டுக் கொடுக்க இயலாது என நினைப்பவர்கள், இந்தக் காலக்கட்டத்திலேயே பின் வாங்கி விடலாம். இதுபோலவே ஜாதி அந்தஸ்து போன்றவை முக்கியம் என நினைப்பவர்கள் காதல் செய்யாம‌ல் இருப்பதே நல்லது.

காதல் என்ற புனிதமான உறவினை கெடுக்காமல் இருப்பதற்காக, காதலில் ஆரம்ப கட்டத்திலேயே ஒதுங்கி விடுவது, மனித குலத்திற்கு செய்யும் நன்மையாகவே இருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil