Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காதலிக்க மிரட்டுவது தவறு

Advertiesment
காதலிக்க மிரட்டுவது தவறு
, திங்கள், 12 அக்டோபர் 2009 (17:17 IST)
webdunia photo
WD
ஒருவரை காதலிக்கிறோம் என்று அவரிடம் கூற மட்டுமே ஒருவருக்கு உரிமை உள்ளது. ஆனால், அவரையும் காதலிக்க வலியுறுத்த யாருக்கும் உரிமை இல்லை.

சிலர், தான் விரும்பும் காதலரோ, காதலியோ தங்களது காதலை மறுக்கும் போது அவர்களை உணர்ச்சிப் பூர்வமாக மிரட்டத் துவங்கிவிடுவார்கள்.

அதாவது, நீ என்னைக் காதலிக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன், சாப்பிட மாட்டேன், கைகளைக் கீறிக் கொள்வேன் என்றெல்லாம் சொல்லி மிரட்டுவார்கள்.

இப்படிப்பட்டவர்களை வேண்டாம், அப்படி எல்லாம் செய்யாதீர்கள் என்று கெஞ்சுவதை விட, தற்கொலை என்பது முட்டாள்களின் முடிவு. அதை நீங்கள் தேர்வு செய்தால் ஒரு முட்டாளை நாம் காதலிக்காமல் போனதே நல்லது என்றுதான் நான் நினைப்பேன்.

நீங்கள் சொன்ன எதைச் செய்தாலும் உங்களை அறுவருப்புடன்தான் நான் பார்ப்பேனேத் தவிர கொஞ்சம் கூட பரிதாபப்பட மாட்டேன் என்று தெளிவாக உறுதியாகச் சொல்லுங்கள்.

இதுபோல் மிரட்டல் விடுபவர்கள் நிச்சயமாக எதையும் செய்ய மாட்டார்கள். இவர்கள் ஒரு கோழைகள் இவர்களிடம் இருந்து எச்சரிக்கையுடன் தள்ளி இருங்கள்.

மேலும் சிலர், உன்னைக் கொன்று விடுவேன், ஆசிட் வீசி விடுவேன் என்று கூட மிரட்டுவார்கள். அவர்களிடம் சிறிது எச்சரிக்கைத் தேவை.

ஆனால் பயத்தை அவர்களிடம் காட்டக் கூடாது. நீ இப்படி எல்லாம் பேசுவாய் என்று தெரிந்து தான் உன்னைப் பற்றி காவல்நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளேன். எனக்கு என்னப் பிரச்சினை என்றாலும் உன் நிலைமை அதோ கதிதான். என் நெருங்கிய உறவினர்களுக்கும் உன் முழு விவரத்தை அளித்துள்ளேன். இனி அவர்கள் உன்னைப் பார்த்துக் கொள்வார்கள் என்று பதில் மிரட்டலை விடுத்துவிட்டு அவரிடம் இருந்து கழன்று கொள்ளுங்கள்.

பெரும்பாலான பிரச்சினைகள் இதைத் தாண்டி வராது. பொதுவாக எல்லாக் காதலர்களும் இது போன்று இருப்பதில்லை. உங்கள் முகம் சுழித்தாலே அவர்களே விலகி விடுவதுதான் இயற்கை. ஒரு சிலர்தான கடைசி வரை சுற்றி உயிரை எடுப்பார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil