என்னப் பேசலாம் என்ற யோசனையா?
, சனி, 26 செப்டம்பர் 2009 (18:07 IST)
இது உலகம் முழுவதிலும் உள்ள மனிதர்களுக்கான குழப்பமாகும். அதாவது நாம் காதலிக்கும் பெண்/ஆணிடம் முதலில் என்னப் பேசுவது என்பதுதான்.இதற்காக பல்வேறு ஆராய்ச்சிகள் கூட நடத்தப்பட்டுள்ன என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆம் உண்மைதான். அந்த ஆய்வுகளில் வெளியானவைநாம் தனித்துத் தெரிய வேண்டும் என்பதற்காக நாடகப் பாணியில் அல்லது கவித்துவமாக பேச பலர் முயற்சி செய்வதுண்டு.ஆனால் இப்படி நீங்கள் முயற்சி செய்தால் அது ஒன்று கேலிக்குறியதாகவும் அல்லது உங்களை கேலிப்பொருளாகவோ மாற்றிவிடும். உங்களை கோமாளி என்று நினைத்துவிடுவார்கள்.கோமாளி என்ற இமேஜை வைத்துக் கொண்டு நீங்கள் எளிதாக ஒருவரிடம் பழக்கத்தை ஏற்படுத்தி விடக் கூடும். ஆனால், அந்தப் பழக்கம் காதலாக மாற வாய்ப்பில்லை.நாம் விரும்பும் ஒருவரிடம் நாம் இயல்பாக பேசுவதுதான் மிகவும் சிறந்தது. இயல்பான விஷயத்தைத்தான் பலரும் விரும்புவார்கள்.காதல் மன்னர்கள் இல்லை இல்லை காதல் பற்றி ஆய்வு நடத்திய சிலர் இந்த கேள்விகள்தான் முதலில் கேட்க சரியானவை என்று தேர்ந்தெடுத்துக் கூறியுள்ளனர்.இந்த கேள்விகள் இயல்பாகவும், ஒருவர் மீதான அக்கறையை காண்பிப்பதாகவும் உள்ளதாம்.
இது ஆண்களுக்கான கேள்விகள்... உங்களுக்கு இந்த ஆடை அழகாக இருக்கிறது.நல்லவேளை, பேருந்தில் கூட்டம் அதிகமாக இல்லை.மழை வரும் போல இருக்கிறதே?இன்னைக்கு உங்க பிரெண்ட் வரலையா?ஹலோ... நல்லாயிருக்கீங்களா?என்பது போன்ற சாதாரண வார்த்தைகளும், விசாரிப்புகளும் ஆரம்ப பேச்சுவார்த்தைக்கு போதுமானவையாம். இதுபோன்ற கேள்விகள் எளிமையாக இருப்பதால் நீங்கள் காதலிப்பவரும் எளிதாக பதில் சொல்ல முடியும். என்ன சொல்வது என்று முழிக்க வைக்க வேண்டாமே.ஆனால், இந்த கேள்விகளை எல்லாம் மனப்பாடம் செய்து வைத்துக் கொண்டு கேட்டுவிடாதீர்கள். அது அதற்கான சூழ்நிலை ஏற்பட்டால் இதனைக் கேட்கலாம். இதேப்போல பெண்கள் ஆரம்பிப்பதாக இருந்தால் அவர்களுக்கான கேள்விகள்...ஹலோ... எப்படியிருக்கீங்க?ரொம்ப நேரமா பேருந்து வரவில்லையா?நீங்க அடிக்கடி காபி சாப்பிடுவீங்க போல...கிளைமேட் நல்லா இருக்குல்ல...
போன்ற இயல்பான கேள்விகளே போதும் ஆண்களை இழுத்துப் போட்டுவிடும்.இந்த சாதாரண வார்த்தைகளே ஒரு நாள் இரவு முழுவதும் தூக்கத்தைக் கெடுத்து மீண்டும் மீண்டும் கேட்டு இன்புறத்தக்கதாக அமையும் என்பதில் மாற்றமில்லை.சரி.. என்ன பேசலாம் என்பதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது. என்ன பேசக் கூடாது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா.. அடுத்த கட்டுரையில் சந்திக்கலாம்.