Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆண்கள் அலைபவர்கள் அல்ல!

Advertiesment
ஆண்கள் அலைபவர்கள் அல்ல!
, வெள்ளி, 24 செப்டம்பர் 2010 (17:17 IST)
ஓர் ஆணை காதல் வளையத்தில் சிக்கவைப்பதமிகவும் எளிது என்றுதான் பெரும்பாலான பெண்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரே ஒரு பார்வை, ஒரே ஒரு சிரிப்பு, கொஞ்சம் செக்ஸியான உடல் அசைவு என எதையாவது செய்தால் ஆண்கள் அம்பேல். அப்படியே குட்டி போட்ட பூனை மாதிரி தங்களையே சுற்றிச் சுற்றி வருவார்கள் என்றெல்லாம் அவர்கள் நினைப்பதெல்லாம் மாயைதான்.

அப்படியானால் ஆண்கள் பெண்களுக்காக அலைபவர்கள் இல்லையா என கேட்காதீர்கள். பெண்களுக்காக அலைபவர்கள்தான். ஆனால் காதலுக்காக அல்ல. குழம்பாதீர்கள்.

பெண்களிடமிருந்து எவ்விதமான எதிர்பார்ப்புகளும் இல்லாமல், பணம் செலவில்லாமல், எவ்வித பொறுப்புகளும் இல்லாமல் செக்ஸ் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே ஆண்கள் அலைவார்கள். ஆனால், காதல் என்று வரும்போது அநேகம் பேர் காணாமல் போய்விடுவார்கள்.

நாம் இங்கே பொறுப்புள்ள, ஒரு பெண்ணை குழந்தைபோல பாதுகாக்கும் ஆண்களுக்கு எப்படிப்பட் பெண்களைப் பிடிக்கும், அவனைக் கவர என்ன வேண்டுமெனப் பார்க்கலாம்.

திருமணம் முடித்த பெரும்பாலான பெண்கள் கவுன்சிலிங்கிற்காக வரும்பொழுது, ஒரு விஷயத்தை அடிக்கடி சொல்வதுண்டு, "எனக்கு கணவரைப் பிடிக்கிறது, ஆனால் அதை அவரிடம் ஒரு நாள்கூட சொன்னதில்லை. எப்படி சொல்வது எனத் தெரிவதில்லை" என்பார்கள்.

இதற்குக் காரணம் என்னவென்றால், ஆண்கள் பெண்களிடமிருந்து கடமைகளை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள். அன்பைத் தவிர.

இப்படிப்பட்ட பெண்களிடம் நீங்கள் யாரிடம் முழு அன்பையும் வெளிப்படுத்துகிறீர்கள்? என்று கேட்டால், அவர்கள் சொல்லும் பதில் பெரும்பாலும் நாய், பூனை, மீன், புறா எனப்படும் வளர்ப்பு மிருகங்களாகவே இருப்பதுண்டு.

நாயை மடியில் தூக்கிவைத்துக் கொஞ்சுவது, முத்தம் கொடுப்பது. உரிமையுடன் செல்லமாக அடிப்பது என எல்லாவற்றையும் செய்வார்கள். ஆனால் அதனை மனிதர்கள் மீது முயற்சி செய்வதில்லை. ஏனெனில் அங்கே ஈகே வந்துவிடும்.

காதல் திருமணமாக இல்லாமல் பெற்றோர்கள் பேசிவைத்த கல்யாணம் என்பது பெரும்பாலும் கடமைக்கான செயல்பாடுகளாகத்தான் இருக்குமே தவிர, காதல் வெளிப்படுவதில்லை.

ஆரம்பத்தில் இருவரிடமும் இருக்கும் ஈகோ குறைந்தால்தான் காதல் வரும். அதன் பின்னரே அன்பும், அந்நியோன்யமும் ஏற்படும் பின் காதல் வரும்.

ஆண்கள் இந்த விஷயத்தில் எதிர்பாராமல், அன்பை செலுத்தி அவ்வப்போது அசத்திவிடுவார்கள்.

பெண்களும் அன்பினை செலுத்த வேண்டும் என்ற மனநிலையில் இருப்பதுதான் காதலுக்கு முக்கியம்.

Share this Story:

Follow Webdunia tamil