ஒரு ஆணின் திருமண நாள் நினைவை இங்கு பார்க்கலாம்.
விடிந்தால் அந்த தம்பதிகளின் 20ஆவது திருமண நாள். நள்ளிரவில் படுக்கையறையில் கணவனைக் காணாமல் திகைக்கிறாள் மனைவி.
எழுந்து விளக்கைப் போட்டுவிட்டு கணவனை ஒவ்வொரு அறையாகத் தேடிக் கொண்டு வருகிறாள். கடைசியாக சமையலறையில் உள்ள மேஜையில் அமர்ந்து காபி அருந்திக் கொண்டு கவலை தோய்ந்த முகத்துடன் ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறான் கணவன்.
அவனருகில் செல்லும் மனைவி தோள்களை அழுத்தி, "என்னங்க ஆச்சு. இந்த நள்ளிரவில் இங்க வந்து உட்கார்ந்திருக்கிறீர்களே" என்று வருத்தத்துடன் கேள்வி கேட்கிறாள்.
அப்போது தனது மனைவியை ஏரிட்டுப் பார்த்த கணவன், மீண்டும் தலையை குனிந்து கொண்டு கேட்கிறான், "நாம் காதலித்துக் கொண்டிருந்த போது ஒரு நாள் உன் அப்பாவிடம் நாம் மாட்டிக் கொண்டது உனக்கு நினைவிருக்கிறதா?" மனைவி, "ஆம், நன்றாக ஞாபகம் உள்ளது" என்று சிரித்தபடி சொல்கிறாள்."
அப்போ அவரது காருக்குள் அழைத்து அவரது துப்பாக்கியை என் நெற்றிப் பொட்டுக்கு நேராக பிடித்தபடி உன் அப்பா என்னை மிரட்டினாரே அது...?""
ம்ம்ம் அதுவும் நினைவிருக்கிறது..." என்று சொல்லிக் கொண்டே நாற்காலியில் அமர்ந்தாள் மனைவி. "
ஒழுங்கு மரியாதையாக என் மகளை திருமணம் செய்து கொள். இல்லை என்றால் உன்னை 20 வருஷம் ஜெயில்ல போட்டுடுவேன்" என்று மிரட்டினாரே.."
ஆமாம்.. நன்றாக நினைவிருக்கிறது.. அதற்கு என்ன இப்போ?" என்றாள்.நான் ஜெயிலுக்குப் போயிருந்தால் இன்று காலையில் விடுதலையாகியிருப்பேன்.