இப்படித்தான் இருக்கணும்
, புதன், 10 பிப்ரவரி 2010 (11:26 IST)
சில கணவன் மனைவியர் எப்படி இருக்க வேண்டும் என்று தெரியாமலேயே தங்களது வாழ்க்கையை கழித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இப்படியும் சிலர் இருக்கிறார்கள். படித்துப் பாருங்கள்.
கணவன் : நம்ம வீட்டுக்கு வந்த திருடன புடுச்சு அடிச்சு, உதச்சு அவன் கை காலெல்லாம் முறிச்சியே, எங்கேந்து வந்தது உனக்கு இவ்ளோ தைரியம்மனைவி : நான் திருடன்னு நினைச்சு அடிக்கலீங்க, நீங்க தான் குடிச்சுட்டு வந்திருக்கீங்கன்னு நினைச்சுதான்..கணவன் : ?!?!?!
***
மனைவி : என்னங்க இப்படியே நான் உங்களுக்கு தினமும் சமச்சிப் போட்டுக்கிட்டு இருந்தா எனக்கு என்னதான் கிடைக்கப் போகுது சொல்லுங்க...கணவன் : இப்படியே சமச்சிக்கிட்டு இருந்தா கூடிய சீக்கிரம் என்னோட எல்ஐசி பணம் உனக்கு கிடைச்சிடும்.
பக்கத்துவீட்டுக்காரர் : ஏன் இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க?
வீட்டுக்காரர் : சமையல் கட்டுல வேல செஞ்சிட்டு இருந்த என் பொண்டாட்டிய கேஸ் கம்பெனிகாரன் சிலிண்டர்னு நெனச்சு தூக்கிட்டு போயிட்டான்.