மக்களவைத் தேர்தலுக்கான முடிவுகள் காலையில் இருந்து அறிவிக்கப்பட்டு வருகின்றன. பெருவாரியான மாநிலங்களில் பாஜக முன்னிலைப் பெற்று வருகிறது.
மகக்ளவைத் தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்திய அளவில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் முன்னிலை பெற்றுள்ளனர். ஆனால் தமிழகத்தில் நிலைமை தலைகீழாக உள்ளது. திமுக கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலைப் பெற்று வருகின்றனர்.
பாஜகவைக் கடுமையாக எதிர்க்கும் மாநிலங்களான கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கூட பாஜக குறிப்பிடத்தகுந்த தொகுதிகளில் முன்னிலைப் பெற்று அதிர்ச்சி அளித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட முன்னிலைப் பெறவில்லை. தமிழிசை, பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் ஹெச் ராஜா போன்ற பிரபலமானவர்கள் தேர்தலில் நிறுத்தப்பட்டும் ஒரு தொகுதியில் கூட முன்னிலைப் பெற இயலவில்லை.
தமிழகத்தில் திமுக 37 இடங்களில் முன்னிலை பெற்று அசத்தி வருகிறது. இந்தியா முழுவதும் காவி மயமாகியுள்ள நிலையில் தமிழகத்தில் மட்டுமே அதன் தாக்கத்தை செலுத்த முடியவில்லை. அதனைக் குறிப்பிடும் விதமாக திமுகவினர் ஒருப் புகைப்படத்தை உருவாக்கி சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். திராவிட இயக்கம் மற்றும் திமுகவின் சிறப்பைக் கூறும் அந்தப் புகைப்படம் தமிழகம் முழுவதும் வைரலாகி வருகிறது.