Publish Date: Thu, 23 May 2019 (08:23 IST)
Updated Date: Thu, 23 May 2019 (08:24 IST)
காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களான ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் முன்னிலைப் பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் 45 இடங்களில் மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்கள் நடந்து வருகின்றன. இதில் காலை 7.30 மணிக்கு முகவர்கள் தீவிர சோதனைகளுக்குப் பிறகு மையங்களுக்குள் அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் தொகுதியான அமேதியில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் ராகுல் முன்னிலைப் பெற்று வருகிறார். அதேப் போல ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட சோனியா காந்தியும் முன்னிலைப் பெற்றுள்ளார்.
மதுரா தொகுதியில் போட்டியிட்ட மேனகா காந்தியும் முன்னிலைப் பெற்றுள்ளார். இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.