அவனுக்கெல்லாம் ஒரு லட்சம் ஓட்டா ? – ஹெச் ராஜாவை சீண்டிய இயக்குனர்

Webdunia
வியாழன், 23 மே 2019 (19:30 IST)
சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா ஒரு லட்சத்துக்கும் மேல் வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்திய அளவில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி தனிப்பெரும்பாண்மையோடு ஆட்சி அமைக்கும் அளவுக்கு முன்னிலைப் பெற்று வருகின்றனர். காங்கிரஸ் மற்றும் பாஜக எதிர்ப்புக்கட்சிகளான மாநிலக் கட்சிகள் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

ஆனால் தமிழகத்தில் நிலைமை தலைகீழாக உள்ளது. திமுக கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலைப் பெற்று வருகின்றனர். தமிழகத்தில் திமுக கூட்டணி 38 தொகுதிகளிலும் அதிமுக 2 இடங்களிலும் முன்னிலை வகித்து வந்தது.  சிவகங்கைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக கார்த்திக் சிதம்பரமும் பாஜகவின் சார்பாக ஹெச் ராஜாவும் போட்டியிட்டனர்.

இதில் கார்த்திக் சிதம்பரம் 2,36,000 வாக்குகளும் ஹெச் ராஜா 98,000 வாக்குகளும் பெற்றுள்ளனர். கிட்டதட்ட ராஜாவின் தோல்வி உறுதியாகியுள்ள நிலையில் ஹெச் ராஜா ஒரு லட்சம் வாக்குகளை நெருங்கியுள்ளதை கிண்டல் செய்யும் விதமாக இயக்குனர் நவீன் ஒரு டிவிட்டைப் போட்டுள்ளார். அதில் ‘அடப்பாவிகளா. அவனுக்கெல்லாம் ஒரு லட்சம் ஓட்டு போட்டிருக்கிங்களே. நோட்டாவுக்கு கீழ ஓட்டு வாங்கும்போதே அவென் அவ்ளோ பேசுவானே. இனி சும்மாவா இருப்பான்’ என ராஜாவை பெயர் குறிப்பிடாமல் சீண்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்தில் அரசு மீது மக்களுக்கு சந்தேகம் உள்ளது.: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: தமிழகம் முழுவதும் ஆரஞ்சு எச்சரிக்கை..!

மெட்ரோ ரயிலுக்குள் பிச்சைக்காரர்கள்.. அதிருப்தியில் பயணிகள்..

புதிய முதலீடு குறித்து எதுவும் முதல்வர் ஸ்டாலினிடம் பேசவில்லை: பாக்ஸ்கான் நிறுவனம் மறுப்பு..!

ஒரே இரவில் 39 உடலுக்கு உடற்கூராய்வு செய்யப்பட்டது எப்படி? அவசரம் காட்டியது ஏன்? சட்டசபையில் ஈபிஎஸ் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments