கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கிய இந்திய மக்களவைத் தேர்தல் மே 19 ஆம் தேதிவரை 7 கட்டங்களாக நடைபெற்றன. உலகமே உற்றுக்கவனித்துக்கொண்டிருக்கும் இந்தியாவின் தலைவிதியைத் தீர்மானிக்கப்போகும் அடுத்த பிரதமர் யார் ? அடுத்ததாக ஆட்சிக்கட்டிலில் அமரப்போவது யார் என்பதுகுறித்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் காலை 8 மணிக்கு தொடங்கின.
இன்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது முதலே நாடுமுழுவதும் பாஜக முன்னிலையில் இருந்தது. காங்கிரஸ் கட்சி பின் தங்கிய நிலையிலேயே இருந்தது.
பிற்பகல் வேளையின் போது நாடு தழுவிய அளவில் பாஜக தனிப்பெரும்பான்மைபெற்று ஆட்சி அமைக்கும் என்ற எண்ணம் மோலோங்கியிருந்தது.
இந்நிலையில் தற்போது பாஜக 339 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அதேசமயம் காங்கிரஸ் 91 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சிமன்றக்குழு கூட்டம் இன்று மாலை 5:30 மணிக்கு டெல்லியில் நடைபெறுவதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆட்சியமைக்க 272 இடங்கள் தேவையான நிலையில் 301 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. மோடிதான் அடுத்த பிரதம என்று ஏறக்குறைய உறுதியாகிவிட்ட நிலையில் உலகில் உள்ள முக்கிய அதிபர்கள் எல்லாம் மோடியிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துவருகின்றன.
தற்போது, தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரதமராகப் பொறுப்பேற்க உள்ள மோடிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். ஆனால் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக போட்டியிட்ட 4 தொகுதிகளிலும் மிகப்பெரும் பின்னடைவை சந்துள்ளது தேமுதிக தொண்டர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.