Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் தாமரை மலரவே மலராது போல....

Webdunia
வியாழன், 23 மே 2019 (10:45 IST)
2019 மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், திமுக 37 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. 
 
வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் மீதமுள்ள 39 தொகுதிகளில் திமுக கூட்டணி 37 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி 2 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. 
 
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என கொக்கறித்த பாஜகவினர் கடும் பின்னடைவை சந்தித்துள்ளனர். பாஜகாவின் நட்சத்திர வேட்பாளர்களாக பார்க்கப்பட்ட தமிழிசை, எச்.ராஜா, பொன்.ராதா கிருஷ்ணன் ஆகியோர் பெரிய வாக்குவித்தியாசத்தில் பிந்தங்கியுள்ளனர். 
 
கன்னியாகுமாரியில் பாஜக வேட்பாளர் பொ.ராதாகிருஷ்ணனை விட சுமார் 23,000 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார் திமுக கூட்டணி வேட்பாளர் ஹெச்.வசந்த்குமார். 
 
தூத்துக்குடியில் பாஜக வேட்பாளர் தமிழிசையை விட சுமார் 25,000 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார் திமுக வேட்பாளர் கனிமொழி. 
 
அதேபோல், சிவகங்கையில் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் கார்திக் சிதம்பரத்தை விட பல வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் எச்.ராஜா பிந்தங்கியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

வாக்குப்பெட்டி வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் ரெய்டு.. நாமக்கல்லில் பரபரப்பு..!

மக்களே உஷார்... 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா.?

இந்தியாவில் வெப்ப அலையால் ஆண்டுக்கு 30 ஆயிரம் பேர் பலி..! உலகம் முழுவதும் எத்தனை பேர் தெரியுமா.?

அடுத்த பிரதமராக அமித்ஷாவை கொண்டுவர பிரதமர் மோடி முடிவு.! அரவிந்த் கெஜ்ரிவால்.!!

பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்ட காமெடி நடிகரின் வேட்புமனு நிராகரிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments