Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாவம் அமைச்சருக்கு வயசாயுருச்சு.. என்னென்னமோ பேசராரு - குஷ்பு கிண்டல் டுவிட்

Advertiesment
பாவம் அமைச்சருக்கு  வயசாயுருச்சு.. என்னென்னமோ பேசராரு - குஷ்பு கிண்டல் டுவிட்
, செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (16:36 IST)
தமிழக அரசியலில் அதிமுகவும் , திமுகவும் எதிரெதிர் துருவங்களாக உள்ளனர். சாதாரண காலங்களிக்லேயே அக்கட்சித் தொண்டர்கள் நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் விமர்சித்து குற்றச்சாட்டு எழுப்புவார்கள். இந்நிலையில் திமுகவில் இருந்து காங்கிரஸ் கட்சிக்குச் சென்ற குஷ்பு மீது சமீபத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம் தெரிவித்தார் அது சர்சையானது.
இதனையடுத்து செல்லூர் ராஜூவுக்கு குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
 
சமீபத்தின் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து குஷ்பு பிரசாரம் மேற்கொண்டார். அப்போதுமக்கள் திரண்டனர்.
 
இதற்கு அமைச்சர் செல்லூர் ராஜூ :  குஷ்பு இளைமையில் அழகுடன் இருந்தார் அதனால் அவருக்கு கோவில் கட்டினார்கள். ஆனால் இப்போது குஷ்புவுக்கு வயதாகிவிட்டது. எனவே சினிமா நடிகர் - நடிகைகளைப் பார்ப்பவர்களால் ஓட்டு வராது என்று காட்டமாகத் தெரிவித்தார்.
 
இதற்குப் பதிலடி தரும் விதத்தில் குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது :
நம்ம அதிமுக விஞ்ஞானி தெர்மாகோல் ராஜூவுக்கு வயதாகிவிட்டுதுன்னு நல்லா தெரியுது...பாவ, என்னென்னமோ பேசிட்டிருக்காரு...என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜக - அதிமுகவுக்கு எதிரான பிரசாரத்திற்கு மறுப்பு - திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு