Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாஜகவுக்கு யாரும் ஓட்டு போடாதீங்க - பிரபல இயக்குநர்கள் அறிக்கை

பாஜகவுக்கு யாரும் ஓட்டு போடாதீங்க - பிரபல இயக்குநர்கள் அறிக்கை
, வெள்ளி, 29 மார்ச் 2019 (16:31 IST)
17 வது மக்களவைப் பொதுத்தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்தியா முழுக்க ஏப்ரல் 11 முதல் மே 19 ஆம் தேதி வரை நடைபெறுவுள்ளது.
தற்போது  100 திரைக்கலைஞர்கள் கூட்டாக சேர்ந்து ஜனநாயகத்தை காப்போன் என்ற ஒரு அமைப்பில் சேர்ந்துள்ளனர். இதில் குறிப்பாக வெற்றிமாறன், லீனா மணிமேகலை, மலையாள இயக்குநர் ஆஷிப் அபு ஆகிய  தமிழ் சினிமா இயக்குநர்கள் கூட்டாக ஒரு அறிக்கை வெளிட்டுள்ளனர். 
 
அதில் கூறியுள்ளதாவது :
 
நம் இந்திய நாடு சோதனையான காலகட்டத்தை சந்தித்துள்ளது. கலாசார ரீதியாகவும், புவியியல் ரீதியாகவும் பலவேறுபாடுகள் இருந்தாலும் நாம் எப்போதும் ஒன்றாக இருக்கிறோம். வரும் நாடாளுமன்றத்தேர்தலில் சரியாகத் தேர்வு செய்ய வேண்டும். 
 
இப்படி செய்யவில்லை என்றால் நாட்டில் சர்வதிகாரம் தலைதூக்கிவிடும்.  கடந்த 2014 ல் பாஜக ஆட்சிக்கு வந்தது. அதன் பிறகு நிலைமை மாறியது. மோசமான பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டனர்.
 
மேலும் கூட்டுக்கொலை, பசுப் பாதுகாப்பு வன்முறை மூலமாக நாட்டைப் பிரிக்கிறார்கள். சமூக வலைதளங்களிலும் வெறுப்பு பிரசாரத்தை பரப்புகிறார்கள்.
 
பாஜகவின் துருப்புச்சீட்டான தனிமனிதர்   எதிர்கேள்வி கேட்டால் தேசவிரோதி என்கிறார். எதிர்ப்பை வெளிப்படுத்தியதால்  சிறந்த எழுத்தாளர்கள், ஊடகர்கள் வாழ்வை இழந்துள்ளனர்.
 
விவசாயிகள் பாதிக்கப்படுள்ளனர்,. எனவே பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அது பிழையாக அமையும்.  அதனால் நமது கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் எல்லாவிதமாக தணிக்கைகளுக்கும் ஈடுபடாத அரசாங்கத்தை தேர்வு செய்வோம். இவ்வாறு அந்த தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

த.மா.காவுக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கீடு