Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்றோடு முடிகிறது வேட்புமனுத்தாக்கல் – பரபர தேர்தல் களம் !

இன்றோடு முடிகிறது வேட்புமனுத்தாக்கல் – பரபர தேர்தல் களம் !
, செவ்வாய், 26 மார்ச் 2019 (11:13 IST)
தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி நடக்க இருக்கும் நிலையில் இன்றோடு வேட்பாளர்களின் வேட்புமனுத்தாக்கல் முடிகிறது.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக ஏப்ரல் 11 முதல் மே 19 வரை நடைபெற இருக்கிறது. தேர்தல் முடிவுகள் மே 23 ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்த தேர்தலில் சுமார் 90 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களாக உள்ளனர். இதற்கான வேலைகளை தேர்தல் ஆணையம் மும்முரமாக செய்து வருகிறது. அரசியல் கட்சிகளும் வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள முக்கியக் கட்சிகள் அனைத்தும் திமுக மற்றும் அதிமுக ஆகிய அணிகளில் ஒன்று சேர்ந்துள்ளனர். நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகியக் கட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றன.  இந்நிலையில் அனைத்துக் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து களப்பணிகளில் மும்முரமாக உள்ளன.

திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டுக் கட்சிகளும் தங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியது போக தலா 20 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. தமிழகத்தில் உள்ள எல்லாக்கட்சிகளின் வேட்பாளர்களின் மனுத்தாக்கலும் கிட்டத்தட்ட முடிந்துள்ள நிலையில் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டனர். இப்படியாக தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில் இன்றோடு தமிழகம் மற்றும் புதுவைக்கான வேட்புமனுத்தாக்கல் முடிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தினகரனுக்கு குக்கர் சின்னம் கிடைக்குமா? உச்சநீதிமன்றத்தில் தொடங்கிய விசாரணை