Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் வழங்கப்படுமா.? அதிமுக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை..!!

Advertiesment
dmdk admk

Senthil Velan

, வெள்ளி, 1 மார்ச் 2024 (17:00 IST)
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை அதிமுக நிர்வாகிகள் சந்தித்து கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
 
நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.
 
திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த முறை அதிமுகவும் பாஜகவும் தனித்தனியே போட்டியிடுவதால், பாமக தேமுதிக கட்சிகளுடன் அதிமுகவும் பாஜகவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
 
தேமுதிக பொருத்தவரை ராஜ்யசபா சீட் கொடுக்கும் கட்சியுடனே கூட்டணி என்று திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது. தேமுதிகவின் நிபந்தனையை ஏற்க பாஜகவும் அதிமுகவும் மறுத்து விட்டதாக தகவல் வெளியானது.

 
இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை  அதிமுக நிர்வாகிகள் இன்னும் சற்று நேரத்தில் சந்தித்து கூட்டணி தொடர்பாக, பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, முனுசாமி மற்றும் பெஞ்சமின் ஆகியோர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள கேப்டன் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலியல் வன்கொடுமை வழக்கு.! ஆசாராம் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு