Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மக்களவை தேர்தலில் விஜய பிரபாகரன் போட்டி..! எந்த தொகுதியில் தெரியுமா..?

Viijayaprabakaran

Senthil Velan

, புதன், 20 மார்ச் 2024 (11:49 IST)
விருதுநகர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மறைந்த கேப்டன் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் இன்று விருப்ப மனு தாக்கல் செய்ய உள்ளார்.
 
மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது. தேமுதிகவிற்கு 5  தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அதிமுக அறிவித்துள்ளது.
 
இதனிடையே தேமுதிக சார்பில் நேற்று முதல் விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை புதன்கிழமை (மார்ச் 20) மாலை 5 மணிக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


விருதுநகர் தொகுதியில் போட்டியிட அவர் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், இதையொட்டி இன்று விருப்ப மனுவை தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த பின் கமலாலயம் வந்த தமிழிசை: உற்சாக வரவேற்பு..!