Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய பிரபாகரனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்..! விருதுநகரில் பிரேமலதா இறுதிக்கட்ட பரப்புரை...!

Vijayaprabakaran

Senthil Velan

, செவ்வாய், 16 ஏப்ரல் 2024 (20:54 IST)
விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் தனது மகன் விஜய பிரபாகரனை ஆதரித்து திருமதி பிரேமலதா விஜயகாந்த் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
 
தமிழகத்தில் வருகிற  19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கான பரப்புரை நாளையுடன் நிறைவடைகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
இந்நிலையில் விருதுநகர் தொகுதியில் தேமுதிக சார்பில் மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார். மறைந்த தனது தந்தையைப் பற்றி உருக்கமாக பேசி அவர் வாக்கு சேகரித்து வருகிறார். மற்றவர்களைப் போல் இல்லாமல் தொகுதியில் தங்கி மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தருவேன் என்று கூறி விருதுநகர் தொகுதி மக்களை விஜய பிரபாகரன் கவர்ந்து வருகிறார்.
 
webdunia
இதனிடையே தமிழகம் முழுவதும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வந்த திருமதி பிரேமலதா, தற்போது விருதுநகர் தொகுதியில் முகாமிட்டு தனது மகன் விஜய பிரபாகரனுக்காக தீவிர பரப்புரை செய்து வருகிறார்.  மத்திய மாநில அரசுகளின் குறைகளை சுட்டிக்காட்டி அவர் வாக்கு சேகரித்து வருகிறார். நாளையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைய உள்ள நிலையில், தனது மகனுக்காக இறுதிக்கட்ட பரப்புரையில் பிரேமலதா மேற்கொள்ள இருக்கிறார்.

விஜய பிரபாகரனை ஆதரித்து அவரது சகோதரர் சண்முக பாண்டியனும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். மூவரும் தனித்தனியே தொகுதி முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருவதால் விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தேமுதிக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 

உயிருடன் இருக்கும்போது கேப்டனை முதல்வராக்க முடியவில்லை என்ற மனநிலையில் இருக்கும் மக்களின் அனுதாபம், அவரது மகனான விஜய பிரபாகரனுக்கு வாக்குகளாக மாற வாய்ப்புள்ளதாக தேமுதிக நிர்வாகிகளின் கருத்தாக உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பி.டி.ஆரின் தாயாருக்கு செங்கோல் வழங்கக் கூடாது.. மனு தாக்கல் செய்தவருக்கு நீதிபதி கண்டனம்..!