Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது..! கனிமொழி உறுதி..!!

Senthil Velan
செவ்வாய், 26 மார்ச் 2024 (14:19 IST)
தூத்துக்குடி தொகுதியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக வேட்புமனு தாக்கல் செய்தபின் கனிமொழி தெரிவித்துள்ளார்.
 
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. இதையொட்டி அதிமுக திமுக பாஜக உள்ளிட்ட தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில்,  தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி,  மாவட்ட தேர்தல் அதிகாரியும்,  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருமான லட்சுமிபதியிடம் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.  அப்போது, அமைச்சர்கள் கீதா ஜீவன்,  அனிதா ராதாகிருஷ்ணன்,  மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

ALSO READ: வாக்காளர்கள் செல்போன் எடுத்துச் செல்ல தடை..! தமிழக தலைமை தேர்தல் அதிகாரி..!!
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக வேட்பாளர் கனிமொழி,  தூத்துக்குடி தொகுதியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகக் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிழக்கு ஆப்பிரிக்க நத்தை: ஆண்டுக்கு 500 முட்டைகள் இடும் இவை இந்தியாவில் ஊடுருவியது எப்படி? என்ன ஆபத்து?

வன்கொடுமைக்கு ஆளான மாணவிக்கு ரூ.25 லட்சம் இடைக்கால நிவாரணம்! - நீதிமன்றம் உத்தரவு!

பாமகவில் வெடித்த மோதல்? மேடையிலேயே ராமதாஸ் - அன்புமணி வாக்குவாதம்! - என்ன நடந்தது?

இன்றைக்கும்.. என்றைக்கும்.. நீ எங்கள் நெஞ்சத்தில்..! - கேப்டன் விஜயகாந்திற்கு மு.க.ஸ்டாலின், கமல், ரஜினி நினைவஞ்சலி!

மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடக்கம்! - பின் தொடரும் காங்கிரஸ் பிரமுகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments