ஓபிஎஸ் மனுவை நிராகரிக்க வேண்டும்..! தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு..!!

Senthil Velan
செவ்வாய், 19 மார்ச் 2024 (16:52 IST)
தனக்கு அதிமுக என்ற பெயரை அளிக்க வேண்டும் என ஓபிஎஸ் அளித்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
 
அதிமுக கட்சி சார்பாக Form A மற்றும் B படிவங்களில் பன்னீர்செல்வம் கையெழுத்திட உத்தரவிட வேண்டும் எனவும், இல்லையெனில் இடைக்கால நிவாரணமாக அதிமுக (OPS) என்ற பெயரில் தேர்தலில் நிற்க அனுமதிக்க வேண்டும் எனவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டுள்ளது. 
 
இந்த விவகாரத்தில் போதிய காலம் இன்றி தேர்தல் ஆணையம் முடிவெடுக்க இயலாமல் போனால், வரும் நாடாளுமன்ற தேர்தலில். அ.தி.மு.க.வையும், தனது அணியையும் பொது சின்னத்தில் போட்டியிட உத்தரவிட வேண்டும் எனவும் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ALSO READ: ஜாபர் சாதிக்கிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்..! டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்.!!
 
இந்நிலையில் தனக்கு அதிமுக (ஓபிஎஸ்) என்ற பெயரை அளிக்க வேண்டும் என ஓபிஎஸ் அளித்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் ராம்குமார் ஆதித்தன், கே.சி.சுரேன் பழனிச்சாமி ஆகியோர் மனு அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments