தேர்தல் விதிமீறல்..! அண்ணாமலை மீது தேர்தல் ஆணையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் புகார்..!!

Senthil Velan
சனி, 13 ஏப்ரல் 2024 (11:31 IST)
கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது தேர்தல் ஆணையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 
 
பாஜக மாநில தலைவரும், கோவை பாஜக வேட்பாளருமான அண்ணாமலை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வீதிவீதியாக சென்று பரப்புரையில் ஈடுபட்டார்.  அப்போது  ஆவாரம்பாளையம் பகுதிக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரவு 10.30 மணிக்கு பின்னர் வந்துள்ளார்.  
 
இரவு 10 மணிக்கு மேலாக வாக்கு சேகரிக்க அனுமதி இல்லாத நிலையில்,  10.30க்கு பின்னரும் அண்ணாமலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதை அடுத்து அப்பகுதியில் இருந்த திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர்.
 
இந்த புகாரின்பேரில் அண்ணாமலை மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் விதிகளை மீறிய அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க கோரி தேர்தல் ஆணையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணிக்கு வெற்றி..! எல்கே.சுதீஷ் உறுதி.!!

தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றாமல் அண்ணாமலை நிராகரித்து வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் லோயர்பர்த் இவர்களுக்கு மட்டும் தான்: இந்தியன் ரயில்வே முக்கிய அறிவிப்பு..!

இன்னும் 140 நாட்களில் திமுக ஆட்சி முடிந்துவிடும்: நயினார் நாகேந்திரன்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்ட கனடா பிரதமர் மார்க் கார்னி.. என்ன காரணம்?

இந்தியும் ஆங்கிலமும் தாய்மொழியை பலவீனப்படுத்துகிறது: சித்தராமையா குற்றஞ்சாட்டு..!

மணமகளின் அப்பாவுடன் ஓடிப்போன மணமகனின் தாய்.. காதலிப்பதாக காவல் நிலையத்தில் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments