Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக - புதிய தமிழகம் இடையே கூட்டணி உறுதி..! தொகுதிகள் நிலவரம் குறித்து விளக்கம்.!!

Senthil Velan
செவ்வாய், 5 மார்ச் 2024 (14:38 IST)
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக - புதிய தமிழகம் இடையேயான கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். 
 
நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை, தொகுதி பங்கிட்டில் தமிழக அரசின் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
 
இந்த முறை தனித்தனியே களம் காணும் அதிமுகவும், பாஜகவும், கூட்டணிக்கான பேச்சுவார்த்தையில் மும்முரம் காட்டி வருகின்றன. 
 
இந்த நிலையில், புதிய தமிழக கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, இன்று அதிமுக தொகுதி பங்கீட்டுக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் இந்தப் பேச்சுவார்த்தையில் உடனிருந்தனர்.

ALSO READ: தூத்துக்குடியில் கனிமொழி மீண்டும் போட்டி..! விருப்ப மனு தாக்கல்..!

இந்த சந்திப்பில் அதிமுக - புதிய தமிழகம் இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும், தொகுதிகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லக்கி பாஸ்கர் விமர்சனம்: மிடில் கிளாஸ் குடும்பஸ்தராக ரசிகர்களை ஈர்த்த துல்கர் சல்மான்

‘அமரனாக’ துப்பாக்கி பிடித்த சிவகார்த்திகேயன் வெற்றி பெற்றாரா? ஊடகங்கள், ரசிகர்கள் கூறுவது என்ன?

இன்று மாலை 19 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

தீபாவளி பட்டாசு வெடிவிபத்து: இதுவரை 21 பேர் தீக்காயம்..!

வயநாடு தேர்தல் எதிரொலி: மலையாளத்தில் தீபாவளி வாழ்த்து தெரிவித்த பிரியங்கா காந்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments