5 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதம் என்ன? இன்னும் ஒரு மணிநேரம் தான் கெடு..

வியாழன், 18 ஏப்ரல் 2019 (17:51 IST)
வாக்குப்பதிவு முடிய இன்னும் ஒரு மணி நேரம் உள்ள நிலையில் தமிழகத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 63.73 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம், புதுவை உள்பட 97 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் விஐபிக்களும், பொதுமக்களும் ஆர்வத்துடன் வாக்களித்து வருவதால் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 3 மணி நிலவரப்படி 50.02 சதவீதமும்  18 சட்டமன்ற இடைத்தேர்தலை பொறுத்தவரை 3 மணி நிலவரப்படி 55.7 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் வாக்குப்பதிவு முடிய இன்னும் ஒரு மணி நேரம் உள்ள நிலையில் தமிழகத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 63.73 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் பானை பிரச்சசையால் வெடித்த கலவரம்: அரியலூரில் பெரும் பதற்றம்....