Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றினால் ? – திருமாவளவன் ஆவேசம் !

Webdunia
திங்கள், 8 ஏப்ரல் 2019 (09:07 IST)
வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுவோம் எனக் கூறிய அன்புமணியின் பேச்சுக்கு திருமாவளவன் கடுமையானக் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பிரச்சார மேடை ஒன்றில் பேசிய பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ‘ வாக்குச்சாவடிகளில் நாம் தான் இருப்போம்… புரிகிறதா?..’ என தொண்டர்களிடம் பேசினார். பாமகவின் நிறுவனர் ராமதாஸும் இதே மாதிரி பேசி பாமக தொண்டர்களை உசுப்பேற்றினார். இதனை தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக சாடியுள்ளனர்.

இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமா வளவனும் இப்போது தனது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். திண்டிவனத்தில் நடந்த பிரச்சாரம் ஒன்றில் பேசிய அவர் ‘மோடியை விரட்ட நாம் ஒன்றினைந்துள்ளோம். திமுகவுக்கும் விசிகவுக்கும் இடையிலானக் கூட்டணி வாக்குகளுக்கு சேர்ந்தது அல்ல. இது கொள்கை ரீதியிலானது. இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் காங்கிரஸூம் இடதுசாரிகளும் ஒரேக் கூட்டணியில் உள்ளன.

வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுவோம் என தொண்டர்களை சில தலைவர்கள் தூண்டி விடுகிறார்கள். அப்படி வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றினால் திமுகவினர் பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள். யாராவது வாக்குகளுக்குப் பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள். அவை அனைத்தும் ஊழல் செய்து சம்பாதித்த பணம்தான்’ என ஆவேசமாகப் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக ஆட்சியில் கஞ்சா வியாபாரிகள் சுதந்திரமாக செயல்படுகின்றனர்.. ஈபிஎஸ்

2026ல் திமுக, தவெக இடையேதான் போட்டி: விஜய் பேச்சுக்கு அதிமுக தலைவர்களின் ரியாக்சன்..!

செல்வப்பெருந்தகையின் மாபெரும் ஊழல்.. திமுக அரசும் உடந்தையா? அண்ணாமலை கேள்வி..!

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments