Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தீட்சிதர்களை சந்தித்தது ஏன்? – திருமா வளவன் விளக்கம் !

தீட்சிதர்களை சந்தித்தது ஏன்?  – திருமா வளவன் விளக்கம் !
, வெள்ளி, 5 ஏப்ரல் 2019 (14:26 IST)
சிதம்பரம் கோயிலுக்கு சென்று தீட்சிதர்களை சந்தித்தது ஏன் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்றத் தேர்தலை திமுக கூட்டணியில் இணைந்து எதிர்கொள்கிறது. அந்தக் கட்சிக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகியத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிதம்பரம் தொகுதியில் அக்கட்சியின் பொதுசெயலாளர் ரவிக்குமாரும் சிதம்பரம் தொகுதியில் தலைவர் திருமாவளவனும் போட்டியிடுகின்றனர்.

சிதம்பரம் தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திருமாவளவன் அத ஒருக்கட்டமாக சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்றார். அங்கு அவருக்கு அர்ச்சகர்கள் திரூநீறு இட்டு மாலை அணிவித்தனர். அவர் அவர்கள் இட்ட திருநீறை அழிக்காமல் அப்படியே அங்கு உள்ளவர்களிடம் வாக்கு சேகரித்தார். நாத்திகரான திருமா வளவன் கோயிலுக்கு சென்றதும் திருநீறு அணிந்து வாக்கு சேகரித்ததும் அவரின் சகிப்புத்தன்மைக்காக பெரிதும் பாராட்டப்பட்டாலும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.

இது தொடர்பாக தமிழக பாஜக தனது டிவிட்டர் பக்கத்தில் கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டு அவரை கேலி செய்துள்ளது. மேலும் இந்துக்களின் வாக்குகளுக்காகவே திருமாவளவன் இவ்வாறு செய்கிறார் என்றும் தெரிவித்துள்ளது.இது குறித்து திருமா வளவன் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விளக்கமளித்துள்ளார். அதில் ‘ சிதம்பரம் தொகுதியில் அனைத்து சமுதாய மக்களையும் சந்தித்து வாக்கு சேகரித்தேன், அதேப் போலதான் தீட்சிதர்களையும் சந்தித்தேன். நான் இதற்கு முன்னதாக 1994, 2004, 2009, 2014 எல்லாத் தேர்தல்களின் போதும் இது போல சந்தித்திருக்கிறேன்.  இம்முறை திமுகவினர் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். இது வெறும் வாக்குக்கான வேடம் அல்ல. அவர்களின் உணர்வுகளை மதிக்கிறேன் என்ற அளவில் இதைப் பார்க்கிறேன். என்னை ஏற்காதவர்களும் ஏற்க மறுப்பவர்களும்தான் என்னை விமர்சித்து வருகின்றனர்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் தமிழகம் வரும் ராகுல் – தேசிய தலைவர்கள் கவனத்தை ஈர்த்த தேனி !