Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை வெளியாகிறது மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் பட்டியல் !

Webdunia
செவ்வாய், 19 மார்ச் 2019 (10:10 IST)
இன்று முதல் தமிழகத்தில் வேட்புமனுத்தாக்கல் தொடங்கவுள்ள நிலையில் கமலின் மக்கள் நீதி மய்யம் நாளை வேட்பாளர் பட்டியலை வெளியிட இருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் தேர்தல் வேலைகள் தீவிரமாக உள்ளனர். பெரும்பாலான கட்சிகள் வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டனர். இந்நிலையில் இடைத்தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தல் இரண்ட்லிலும் தனித்துப் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் நாளை வேட்பாளர் பட்டியலை வெளியிடும் என அறிவித்துள்ளது.

அதையடுத்து மார்ச் 24 ஆம் தேதி கோவை கொடீசியா வளாகத்தில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடக்க உள்ளது. கமல் தனது சொந்த தொகுதியான ராமநாதபுரத்தில் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. மேலும் கமல் கட்சியில் உள்ள முக்கியப் பிரமுகர்களான ஸ்ரீப்ரியா, சினேகன், கமீலாநாசர் ஆகியோரும்  போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனக் கூறப்படுகிறது.

கமல் தங்கள் கட்சியின் சார்பாக போட்டியிடக் கட்சி உறுப்பினர் அல்லாதவரும் விண்னப்பிக்கலாம் என அறிவித்திருந்தார். மேலும் வேட்பாளர் விருப்பமனுப் படிவங்களில் தனித்தொகுதி தவிர்த்து மற்ற பொதுத்தொகுதிகளில் சாதி மதம் ஆகியவற்றைக் குறிப்பிடத் தேவையில்லை எனவும் குறிப்பிட்ட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தேர்தலில் போட்டியிட 1300க்கும் மேற்பட்டோர் விருப்பமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்காதலனோடு உல்லாசம்! கட்டிய மனைவியை கட்டிலில் வைத்து பிடித்த கணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு!

பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை தர முடியாது: உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்

காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்: பாலஸ்தீனிய கால்பந்து வீரர் பரிதாப பலி..!

போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு ராக்கி கயிறு கட்டிய பெண் போலீஸ்.. நெகிழ்ச்சி சம்பவம்..!

ஒரு சொல்லுக்கு பொருள் தெரியாதவரை கவிப்பேரரசு என அழைப்பதா? வைரமுத்துவுக்கு பாஜக கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments