Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதவாக்கரை தேர்தல் அறிக்கை – திமுக குறித்து ஜெயக்குமார் கண்டனம் !

Webdunia
செவ்வாய், 19 மார்ச் 2019 (13:07 IST)
இன்று வெளியாகியுள்ள திமுக தேர்தல் அறிக்கை உதவாக்கரை அறிக்கை என்றும் அரைவேக்காட்டுத்தனமானது என்றும் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

திமுகவின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை இன்று வெளியாகியுள்ளது. பரவலாகப் பாராட்டு பெற்று வரும் அறிக்கையை அதிமுகவினர் சரமாரியாக விமர்சனம் செய்துவருகின்றனர். மேலும் சிலர் அதிமுக அறிக்கையை திமுக காப்பி அடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் திமுவின் தேர்தல் அறிக்கை உதவாக்கரையானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

அப்போது ‘அதிமுக அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஏற்ற வகையில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.  ஆனால் திமுக அறிக்கை அரைவேக்காட்டுத்தனமாகவும் உதவாக்கரையாகவும் உள்ளது. நாங்கள் தமிழை ஆட்சிமொழியாக அறிவிப்போம் என அறிவித்தால் அவர்கள் தமிழை இணைமொழியாக அறிவிப்போம் என துரோகம் செய்கிறார்கள். அது என்ன ஆட்சி மொழி… திமுக - காங்கிரஸ் கூட்டணி சேர்ந்து ஒன்றரை லட்சம் பேரைக் கொன்ற உணர்வு குற்ற உணர்வாய் அவர்களைக் குத்துவதால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழர்களின் மீது உண்மையானப் பாசம் கொண்டவர்கள் அதிமுகவினர்தான். அவர்களுக்கு சர்வதேச நீதிமன்றத்தில் முறையான தண்டனைப் பெற்று தருவோம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments