திருவாரூரில் சீமான் பேச்சு – கூட்டத்தில் அமர்ந்து ரசித்த கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் !

Webdunia
செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (11:00 IST)
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சை சிபிஐ கட்சியின் வேட்பாளர் ஒருவர் கூட்டத்தில் நின்று கேட்ட சம்பவம் திருவாரூரில் அரங்கேறியுள்ளது.

நாம் தமிழர் கட்சி மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்து 20 பெண் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளார்களுக்காக அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகம் முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.

திருவாரூரில் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து நேற்றிரவு பிரச்சாரத்தில் ஈடுபட்டார் சீமான். அப்போது அந்த பகுதியில் வாக்கு சேகரிந்துக்கொண்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் எம்.செல்வராஜ், மேடையின் கீழே உள்ள இருக்கையில் அமர்ந்து சீமானின் பேச்சை ரசித்து கேட்டார். செல்வராஜின் வருகையை அறிந்த சீமான் அவரை மேடைக்கு அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டர் வீட்டில் திடீர் ரெய்ட்.. கஞ்சா உள்பட ரூ.3 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்..!

காபி ரூ.700, தண்ணீர் பாட்டில் ரூ.100.. இப்படி விலை வைத்தால் தியேட்டர்கள் மூடப்படும்: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

குருநானக் கொண்டாட்டத்தில் பங்கேற்க இந்தியர்களுக்கு மறுப்பு: பாகிஸ்தான் அடாவடி..!

ஒரே நபர் மீண்டும் மீண்டும் வாக்களித்தபோது, முகவர்கள் ஏன் ஆட்சேபிக்கவில்லை? ராகுல் காந்திக்கு கேள்வி

ஓட்டுனர் உரிமத்துடன் செல்போன் எண்ணை இணைக்க வேண்டும்.. இணைக்காவிட்டால் என்ன ஆகும்?

அடுத்த கட்டுரையில்
Show comments