டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கும் வழக்கில் குக்கர் அல்லது பொதுவான சின்னம் தரமுடியாது என உச்ச்நீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பளித்துள்ளது.
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்குக் கொடுக்க வேண்டுமென அமமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டுக்கட்சிகளும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில் இரட்டை இலை சின்னம் அதிமுகவுக்கே சொந்தம் என்று தீர்ப்பளித்தது. ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து அமமுக சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதற்கிடையே கடந்த ஆண்டு நடைபெற்ற ஆர்கே நகர் இடைத்தேர்தலில் மக்களிடம் பல ஆண்டுகளாக அறிமுகமாகியிருந்த இரட்டை இலையையும், உதயசூரியனையும் புதியதாக வந்த டிடிவி தினகரனின் குக்கர் வீழ்த்தியது. எனவே தனக்கு முதல் வெற்றியை பெற்றுத்தந்த குக்கரை நிரந்தர சின்னமாக்க அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்தார்.
அதனால் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைக்கவேண்டும் என்றும் தங்கள் கட்சியான அமமுகவுக்கு குக்கர் அல்லது ஏதேனும் ஒரு பொது சின்னத்தை ஒதுக்கித் தரவேண்டும் என்றும் கூறியிருந்தனர். அந்த வழக்கின் விசாரணை வந்தபோது தேர்தல் ஆணையம் ஆஜர் ஆகாததால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதையடுத்து விடுமுறைக்குப் பிறகு நேற்று உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
இன்றுடன் தமிழகத்தில் வேட்புமனுத்தாக்கல் முடியும் தருவாயில் இன்று உச்சநீதிமன்றம் நீதிமன்றத்தில் ஆஜரான தேர்தல் ஆணையம் ‘தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னத்தை வழங்க முடியாது என்றும் அமமுக பதிவு செய்யப்படாத கட்சி என்பதால் பொது சின்னத்தை வழங்க முடியாது’ என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் விரிவான அறிக்கையை நீதிமன்றம் கேட்டது. இந்நிலையில் மீண்டும் தொடங்கிய இந்த வழக்கு விசாரணையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னம் தர மறுத்துள்ளது. ஆனால் அவர்கள் கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் பொதுவான சின்னம் ஒன்றை வழங்க தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.