Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதிர்கட்சி அந்தஸ்தை பெறுமா காங்கிரஸ்?? காத்திருக்கும் சவால்!!

Webdunia
வியாழன், 23 மே 2019 (14:26 IST)
மக்களவையில் காங்கிரஸ் எதிர்கட்சி என்னும் அந்தஸ்தையும் இழந்துவிடுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 
 
மக்களவைத் தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்திய அளவில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி தனிப்பெரும்பாண்மையோடு ஆட்சி அமைக்கும் அளவுக்கு முன்னிலை பெற்று வருகின்றனர். 
 
அதாவது பாஜக தனித்தே 301 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. கூட்டணியோடு சேர்த்து 349 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. அதேபோல் காங்கிரஸ் கட்சி தனித்து 50 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது, கூட்டணியோடு 89 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. மற்றவை 104 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளன. 
 
தற்போது காங்கிரஸ் முன்னர் பெரிய சவால் ஒன்று காத்திருக்கிறது. மக்களவை தேர்தலில் எதிர்கட்சி என்னும் அந்தஸ்து பெருவதற்கு 55 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். 
 
ஆனால், இப்போது காங்கிரஸ் 50 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளதால், எதிர்கட்சி என்னும் அந்தஸ்து பெறுவதே சிக்கலாகி உள்ளது. இந்த சிக்கலில் இருந்து காங்கிரஸ் தப்பிக்க இன்னும் 5 தொகுதிகளில் முன்னிலை பெறுவதோடு வெற்றியும் பெற வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கனமழை எதிரொலி: இன்று நடக்கவிருந்த என்னென்ன தேர்வுகள் ஒத்திவைப்பு?

கனமழை எதிரொலி: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை?

தமிழ்நாட்டில் இன்று 25 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments