Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேட்க கேட்க இனிக்கும் வார்த்தைகள்….

speech
, செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (22:43 IST)
''கேட்டார்  பிணிக்கும் தகை அவாய்  கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்'' என்று வள்ளுவர் கூறியதற்கேற்ப  ஒவ்வொரு வார்த்தையாலும் மற்றவர்களை எப்படி கவருதல் வேண்டும்! என்னென்ன பேசும்போது எப்படி மற்றவர்களின்  மனதில் தைக்கும் விதத்தில் வார்த்தைகளைத் திறம்பட கையாள வேண்டும் என்பது பற்றி நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.
.
ஏனென்றால் ஒரு வார்த்தைகள் தான் சொல்லாகவும், அந்த சொல்தான் செயலாகவும், செயல்தான் நடத்தையாகவும், அந்த நடத்தைதன் நம் பழக்கமாகவும் நம் வாழ்க்கையை அபரிக்கும் வழக்கத்தைக்கொண்டு, நம் மீதான எதிர்ப்பார்ப்பை மற்றவர்களிடம் கூட்டவோ அதைக் குறைக்கவோ இல்லை தனித்துக்காட்டவோ செய்கிறது..

நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான சொற்களில் எத்தனையோ நம் நெஞ்சிற்குப் புறமானதாகவே இருக்கும்போது, அது எப்படி மற்றவர்களின் காதுகளில் ஆபணம் அணிவிக்கும்?

மூத்திரப் பையைச் சுமந்தபடி, ஒவ்வொரு கூட்டத்திலும், மக்களின்  முன்னிலையில் பேசியபோதெல்லாம் பெரியாரின் சொற்கள்  எல்லாம் திராவிடப் பாதைக்கு வழிகாட்டி தமிழகத்தில் மறுமலர்ச்சிக்கு வித்திட்டது.

மாவோவின் சொற்களும் சிந்தனைகளும் சீனாவில் கம்யூனிச சிந்தாந்தத்திற்கு வித்திட்டு, ஒரு புதுயுகப்பாய்ச்சலுக்கு அடிகோலியது.

யூதகுலத்தையே அடியோயு அழிக்கப் புறப்பட்டு அதைச் செயல்படுத்தி, தன் உயிரில் மனித சாபத்தை வாங்கிக்கட்டிக்கொண்ட  ஹிட்லர், வரலாற்றில் ஒரு அழியாத கறையாய்ப் படிந்துள்ள போதிலும், இரண்டாம் உலகப்போரில் அவர் உத்தரவிட்ட ஒவ்வொரு சொல்லும்தா நாசிச படைகளுக்கான வீரம்முளைக்கக் காரணம் என்பதை மறக்கமுடியாது.

ஒரு பாடலில் அமைந்துள்ள சொற்கள் எத்தனை பேரை காலம் கடந்தும் கட்டிப்போடுகிறது.

கவிராயர் உடுமலை நாராயணா கவி எழுதிய ஒரு பாடலை,  அமெல்லிசை மாமன்னர் விஸ்வநாதன் ராமமூர்த்தி ஒரு முறை பாடகரிடம் கொடுத்துப் பாடச் சொல்லியுள்ளார். அந்தப் பாட்டில் இருந்த வார்த்தையை தவறாக உச்சரிக்கவே,  பாடகர் தவறாகப் பாடவே, கோபம் அடைந்த கவி, மெல்லிசை மாமன்னரின் கன்னத்தில் அறைந்ததாகத் தகவலுண்டு.

ஆக, வார்த்தைகளின் தன்மையையும் அது கொடுக்கும் உன்னத்தத்தையும் அறிந்தோர் எந்தச் சூழலிலும் அதைத் தங்களின்   நாவிலிருந்தும், படைப்பில் இருந்தும் தவறாக உச்சரிப்பதில்லை.

இதற்கு உதாரணாமாக காங்கிரஸ் தலைவர் ஒருவர் சமீபத்தில், இந்தியாவின்  முதன்மை குடிமகன் குடியரசுத்தலைவர் அவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, ராஷ்டிரபத்தினி என்ற வார்த்தையால் குறிப்பிட்டது மழைக்காலப் பாராளுமன்றக் கூட்டத்தொடரைக் கலகலக்கவைத்துள்ளது.

எனவே, வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது, ஒரு  நீதிபதியைப் போல் தெளிவான பார்வையு மனமும் கொண்டு பிரயோகித்தால் அது மொழிக்கும் இனிக்கும், அதைக் கேட்கும் மனிதர் உள்ளமும் அன்பில் துளிர்க்கும்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முள் சீத்தாபழத்தை சாப்பிடுவதால் என்னவெல்லாம் நன்மைகள் உள்ளது தெரியுமா...?