Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எளிமையான வாழ்க்கை...சிறப்புக் கட்டுரை

எளிமையான வாழ்க்கை...சிறப்புக் கட்டுரை
, சனி, 27 பிப்ரவரி 2021 (23:15 IST)
இந்த பரந்தவுலகில் மனிதர்கள் என்ன கார்வைத்திருக்கிறார்கள்… என்னென்ன பைக் வைத்திருக்கிறார்கள்…என்னென்ன நாய்களை வளர்க்கிறார்கள்.. என்னென்ன ஃபெர்பியூம் உபயோகிக்கிறார்கள்… எங்கெங்கல்லாம்  சுற்றுலா செல்கிறார்கள்…யார் யாருடன் நட்பு வைத்துக்கொள்கிறார்கள்….என்ன பிராண்ட் உடைகள் உடுத்துகிறார்கள் என்பதைக் கண்டு ஒருவர் மற்றொருவர் மீது பொறாமைக்கண் படுவதற்கும் தமக்குத்தானே மநிம்மதியில்லாத பெருவிருப்பத்தின் ஆசைஊசிகளை மனதில் போட்டுக்கொள்வதற்கும் இந்த ஒப்பீடுகளே காரணமாகவுள்ளது.
 
இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம்பெற்று தென்னாப்பிரிக்காவில் தன் வக்கில் தொழிலை மேற்கொண்டுவந்தாலும் மதுரைக்கு வந்தபோது, நாள்தோறும் காலநேரமில்லாமல் பாடுபடு நம் தோழர் விவசாயிகளின் கலப்பை பிடித்த கையுடன் வெறுமேனியுடன் இருப்பதைப்பார்த்து அன்றுடம் மேலாடை உடுத்தாமலிருந்த மகாத்மா காந்தியடிகளின் எளிமை! உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர் ராக்பெல்லரிடம் சிலர் நன்கொடை கேட்கச் சென்றபோது, அவர் ஒரு மெழுகுவர்த்தியை வைத்துப் புத்தகம் படித்துக்கொண்டிருந்தார். அவர்கள் தன் அறைக்கும் அனுமதித்தபின் தனது மேஜையில் எரிந்துகொண்டிருந்த மெழுகுவர்த்தியை அவர் அணைத்துவிட்டு அவர்களிடன் பேச்சுக்கொடுத்தார். இவரா நமக்கு நன்கொடை கொடுக்கப்போவதென்று வந்தவர்கள்   நினைத்தபோத், அவர்கள் எதிர்ப்பார்த்ததை விட பலநூறு மடங்களு அதிகமான நன்கொடை கொடுத்து அவர்களை அதிரவைத்தார். அவர்கள் அவரிடம் இந்த மெழுகுவர்த்தியை அணைத்துவிட்டு பேசுகிற இவரா நன்கொடை கொடுக்கப்போகிறார் ? எனத் தப்புக்கணக்குப்போட்டுவிட்டோம் என மன்னிப்புக் கேட்டனர். அதற்கு வாரன் ராக்ஃபெல்லர் கூறினார்: நான் இந்தளவு சிக்கனத்துடன் இருப்பதால்தான் நீங்கள் எதிர்பார்த்தைவிடை அதிகமான என்னால் நன்கொடை கொடுக்கமுடிந்தது என்று கூறினார். வந்தவர்கள் வாயடைத்துப்போனார்கள்.
 
எனவே எளிமை எக்காலத்திற்கும் சாயம்போகாத வானின் வண்ணம்… அந்த நீலக்கடலின் உண்மைப்பிரதிபலிப்பு என்பது என் கருத்து

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்