Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரு துறையில் சாதிப்பது எப்படி?- சினோஜ் கட்டுரைகள்

Mozart
, வியாழன், 16 பிப்ரவரி 2023 (22:46 IST)
சாதிக்கத்துடிக்கின்ற இளைஞர்களுக்கான தன்னம்பிக்கைத் தொடரிது. 
 
இன்று ஒரு இளைஞர் காலமே எனக்கு போன் செய்து, தன் மீது  நம்பிக்கை இல்லை என்று கூறினார். என்ன செய்வதென்றே தெரியவில்லை என்று பதறினார்.
 
இது எல்லோர் வாழ்க்கையிலும் இருக்கும்.
 
பெரிய கோடீஸ்வரர்கள்  முதல் தெருக்கோடியில் உள்ள பரம ஏழைகள்  வரை எல்லோர் வீடுகளிலும் ஜன்னல் இருப்பது போலவே பூமியில் மனிதனாகப் பிறந்த எல்லோரது வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு விதத்தில் அந்த இளைஞர் கூறியதுபோல் ஒருமுறையாவது நடந்திருக்க வாய்ப்புள்ளது.
 
அதற்காக வாழ்க்கை முழுவதும் வாய்ப்பில்லை என்று வாய்க்காலில்   திமிங்கலத்தைத் தேடுவது ஏமாற்றம் தருவதுபோல் நமக்கு    நாமே  ஏன் ஓர் ஏமாற்றச் சம்மட்டி அடி கொடுத்துக் கொண்டு காலம் முழுவதும் வாழ்க்கையைப் பிடிக்காத ஒன்றில் நம்மைத் தள்ளி நரகத்தின் வெறுப்புப் பிடியில் தவிக்கவிட வேணடும்?
 
ஒருதுறையில் சிறுவயது முதலே ஆர்வத்தைச் செலுத்த வேண்டும்! அதற்காகத் தொடர்ந்து உழைக்க வேண்டும்!
 
தன் திறமையை கொஞ்சம் அல்ல, நிறைய வளர்த்துக் கொண்டு வாழ்க்கை யென்ற நீண்ட தூரப் பயணத்திற்கு ஆயத்தமாக வேண்டும்!
 
ஒரு உள்ளூரில் உள்ள ஆறு, ஏரி, குட்டைகளைக் கண்டு இதையே அதிசயம் என நினைத்தால், அமேசான், நைல் நதி, மஞ்சல் நிதி, தேம்ஸ் நதிகளை பேரதிசயம் என்று நேரில் தரிசிப்பது எப்போது?
 
 உலகம் பெரிது! நம் வாழ்வோ குறுகியது.
 
நீண்ட தூரப் பயணத்திற்கு ஆயத்தமாக நம் திறமையை  எப்பது வளர்ப்பது? அதில் எப்படி சாதிப்பது?
 
அறிஞர்களும், சாதனையாளர்களும் கூறியதை, எனக்குத் தெரிந்த ரகசியத்தை உங்களுக்கும் சொல்கிறேன்! கேளுங்கள்!

18  -ம் நூற்றாண்டில், ஆஸ்திரியாவைச் சேர்ந்த மொசார்ட் ஒரு இசைப்பேரறிஞர்.  இங்கிலாந்து நாட்டில், ஒரு பாரம்பரியமிக்க தேவாலயத்தில் இசையமைக்கும்போது, அங்குள்ள பாடலை வெளியில் சொல்லக்கூடாது என்றிருந்த ஆலய ஆணையை, திருச்சபையில் சட்டத்தை, அதுவரைக் கடைபிடித்துவந்த கட்டளையை மீறி, இந்தச் செவ்வியலிசை  சாதாரண மக்களின் காதுகளையும் எட்டிப்பிடிக்க வேண்டுமென திட்டம்போட்டு, ஒரு வெள்ளிக்கிழமை அன்று மட்டும் ஒலிக்கும் அந்தப் பாடலை இரண்டு வெள்ளிக்கிழகைகளுக்கு  நேரில் சென்று, அதைக் காதால் கேட்டு, மனதில் ஒட்டவைத்து,  தன் வீட்டிற்கு வந்து, அந்த செவ்வியலிசையை மேற்கத்திய  நோட்ஸாக – இசைக்குறிப்பாக எழுதி, அதைப் பதிப்பித்தார்.
 
இங்கிலாந்து மட்டுமல்ல ஒட்டுமொத்த ஐரோப்பாவும்  மொசார்டின் செயலுக்கு விமர்சித்தது. ஆனால், சர்ச்சைகள் ஓய்ந்ததும், எல்லோருக்கும் இப்பாடல் சென்று சேர உதவிய மொசார்டின் திறமையை மெச்சினர்.
 
அத்தனை நூற்றாண்டுகள் ஆலயத்தின் எல்லையைத் தாண்டான இசையை எப்படி இவர் இருமுறை கேட்டு, அதன் சங்கதிகள் ஒன்றுவிடாமல் இசைக்குறிப்பில் பட்டை தீட்டி, மீட்டுருவாக்கம் செய்ய முடிந்தது என்று திருச்சபை பிரபுக்கள் முதற்கொண்டு எல்லோரும் வியந்தனர்.
 
ஆனால், இதற்கான வித்தையை, மொசார்ட் தன் 3 வயதிலேயே மனதில் வித்தூன்றினார் அல்லவா?

இந்த உலகில் இப்போதெல்லாம் சாதிக்கப்புறப்படும் வயதில் அவர் தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.
 
அதாவது1756 ல் பிறந்த அவர், 1791 ல் இறந்தார். 
 
அவருடைய சாதனைகளோ இன்று வரை யாரும் எட்ட முடியாதது.
 
அவரது இசை முன்னோடிகளான பக், ஹஹைடின் ஆகியோரைப்போன்று இவரையும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினர்.
 
தன் இறப்பிற்குள் 35 க்கும் மேலான  சிம்பொனிகள், பாடல்கள் அனைத்து, அவருக்குப் பின் வந்த பீத்தோவனுக்கும், உலகில் உள்ள முன்னணி இசைக்கலைஞர்களுக்கும் தன் சாதனைகளை முடிந்தால் தொடுங்கள், முறியடியுங்கள் என்று தன் குறுகிய வாழ்க்கையில்  நிகரற்ற சாதனைகள் படைத்துவிட்டுச் சென்றார்.
 
அதனால், ஒரு துறையில் சாதிக்க அந்த துறையில் நம் ஆர்வத்துடன், செயலில் இறங்கி, அதை எப்படி செயல்படுத்திச் சாதிக்கிறோம் என்பது முக்கியம்.
 
இக்காலத்தில் கூட தொழில் நுட்பம் உண்டு.
 
அக்காலத்தில் அதெல்லாம் கிடையாது. கருவிகள் மட்டுமே, அதுவும் மனிதன் இயக்கினால் தான்.
 
இக்காலத்தில் தொழில் நுட்பத்தைத் துணைக்கு அழைத்துச் சாதிக்க நம்மால் முடியாதா என்ன?
 
போதாததற்கு தொட்ட இடமெல்லாம் சமூக வலைதளத்தில் முளைத்துள்ள நண்பர்கள்  நம் வாய்ப்பிற்க்காக கருவியாகப் பயன்படுத்தினால் என்ன ஆகப்போகிறது?
 
ஒருதுறையில் சாதிக்க, அத்துறையைப் பற்றிய புரிதலும், அதற்கான அர்ப்பணிப்புடன் நம்மை ஈடுபடுத்துவதும், தொடர் முயற்சியும் முக்கியம்.
 
3 ஆண்டுகள் கல்லூரிப் படிப்பு என்றால் படிப்புகள் தவிர, நேரம் கிடைக்கும்போது, பொழுதுகளை அர்த்தப்படுத்த,  நமக்கான துறையில் முழுமையாக ஈடுபட்ட வேண்டும்.
 
3 ஆண்டுகள் கழித்துவந்தால்  கல்லூரிப் படிப்பிற்காக சான்றிதழும், நம் வாழ்க்கையில் முன்னேற தன்னம்பிக்கையும்  நமக்குப் பக்க பலமாக இருக்கும்!
 
கண்ணில் படுவதெல்லாம் வாய்ப்புகள் தான்! ஒருவருக்கு காலில் முள் ஏறினால்! அவருக்கு வலி எரிச்சல்! அதே போன்ற முள்ளை எடுக்க இன்னொரு முள்ளைப் பயன்படுத்தினால் வாய்ப்பு!
 
எத்தனை நேரம் ஒரு துறையில் முழுமையாக நாம்  ஈடுபடுகிறோம் என்பது நம் திறமைக்கும், !எதிர்வரும் பிரச்சனையாக அணுகாமல், வாய்ப்பாக காணும்போது  நமக்கு எல்லாம் வெற்றி தான்!
 
#சினோஜ்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நெற்றியில் கருமை இருந்தால் என்ன செய்ய வேண்டும்?