கலை நிகழ்ச்சிகள் நடத்த முன்வரும் இளம் கலைஞர்களுக்கு நிதியுதவி அளிக்க இயல் இசை நாடக மன்றம் தீர்மானித்துள்ளது.
இது குறித்து இயல் இசை நாடக மன்றம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், தன்னார்வக் கலை நிறுவனங்களின் மூலம் மேடையில் கர்நாடக பாணியில் கலை நிகழ்ச்சி நடத்த பயிற்சி பெற்றுள்ள இளம் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் திட்டத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் கலை நிகழ்ச்சி ஒன்றுக்கு குரலிசை, புல்லாங்குழல், ஜலதரங்கம் குழுவுக்கு ரூ.1950, கதாகாலட்சேபம், நாதசுரம், கிளாரினெட், கிதார் குழுவிற்கு ரூ.4000மும், மாண்டலின், சாக்சபோன் குழுவிற்கு ரூ.3000மும், பரதநாட்டியக் குழுவுக்கு ரூ.5000மும் நிதியுதவியாக வழங்கப்படும்.
ஒவ்வொரு நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்யும் நிறுவனங்களுக்கு ரூ.2000 வழங்கப்படும். இசைக் கலைஞர்கள் 16 முதல் 30 வயதுக்கு உட்பட்டவராகவும், பரதக் கலைஞர்கள் 15 முதல் 30 வயதுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் தபால் மூலம் பெற ரூ.5க்கான தபால் தலையை ஒட்டி,
உறுப்பினர் செயலர்,
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்,
31, பி.எஸ். குமாரசாமி ராஜ சாலை,
சென்னை - 28 என்ற முகவரிக்கு வரும் 30ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
மேலும் தகவல்கள் அறிய தொலைபேசி - 2493 7471.