Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பழைய புத்தகக் காட்சி நூலகம்

பழைய புத்தகக் காட்சி நூலகம்

Webdunia

சென்னை நகரில் பல நூலகங்கள்அமைந்திருந்தாலும் தற்போது பரவலாக பேசப்பட்டு வரும் நூலகம் பற்றி தான். சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கதை புத்தகங்களை உள்ளடக்கி புத்தகக் காட்சிக் கூடமாக விளங்கும் இந்த நூலகத்தை அமைத்தவர் 35 வருட கால முதுபெரும் பத்திரிக்கையாளர் ஆர். விஜயராகவன். 16 வயதில் இந்த நூலகத்தை அமைக்க வேண்டும் என்று தோன்றிய எண்ணத்தை தன்னுடைய 57 வயதில் நிறைவேற்றியுள்ளார் விஜயராகவன்.

சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் கதை புத்தகங்கள், மருத்துவம், ஆன்மீகம், சிறுகதைகள், தனித் திறமையை வளர்த்துக் கொள்ள பயன்படும் கதைகள், தத்துவ சாஸ்திரத் தொகுப்புகள், விளையாட்டு உட்பட 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. நூலகம் தொடங்கப்பட்டு ஒரு ஆண்டு தான் நிறைவடைய போகிறதென்றாலும் தன்னுள் ஆயிரத்து இருநூறு உறுப்பினர்களை சேர்த்து கம்பீரமாக காட்சியளிக்கிறது. குழந்தைகளின் சிந்தனைகளை தூண்டக் கூடிய அறிவுச்சார் கதைகள், இல்லத்தரசிகளுக்காக குமுதம், கல்கண்டு, ஆனந்த விகடன் உட்பட பல்வேறு புத்தங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட தொடர் கதைகளின் தொகுப்பு என மிகுந்த பயனுள்ளதாக விளங்கும் இந்த நூலகத்தைப் பற்றி அதன் நிறுவனர் ஆர். விஜயராகவன் இதோ நம்மிடம்...

தொடங்கியுள்ள நோக்கம்........

பல புத்தகங்களையும் தொடர்ந்து படிக்க படிக்க தான் ஒரு மனிதனின் சிந்தனை ஆற்றல் மேலோங்குகிறது. படிக்கணும்.... படிக்கணும்.... படிக்கணும் இது தான் எனக்கு வேண்டியது. எனக்கு 16 வயது இருக்கும் போது இப்படியொரு நூலகத்தை தொடங்க வேண்டும் என்று எண்ணினேன். ஆனால் அப்போது எண்ணியது இப்போது என்னுடைய 57 வயதில் நிறைவடைந்து விட்டது. இந்த நூலகத்தின் மூலம் சிறுவர்கள், இளைஞர்கள், இல்லத்தரசிகள் என பல தரப்பட்டவர்களையும் தேவையில்லாத பல டிவி நிகழ்ச்சிகளை பார்ப்பதிலிருந்து வெளியே கொண்டு வர முடிகிறது. என்னால் முடிந்தளவு ஏதாவது சேவை செய்ய வேண்டும் என்று எண்ணியதன் விளைவு தான் இந்த நூலகம்.


நூல்கள் பற்றி.......

இதில் முழுவதும் கதை புத்தகங்கள் தான் உள்ளன. குழந்தைகள், இல்லத்தரசிகள், இளைஞர்கள், பெரியவர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் தகுந்த மாதிரி சேகரிப்பு தொகுப்புகள் உள்ளன. பல தமிழ் கதைப் புத்தகங்கள் தொடர் கதைகளை வெளியிடும். அந்த கதைகளின் சேகரிப்பு புத்தகங்கள் உள்ளன. இது இல்லத்தரசிகளின் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இளைஞர்கள் தங்களின் தனித் திறமையை வளர்த்துக் கொள்ளப் பயன்படும் புத்தகங்கள் விளையாட்டஉள்ளிட்ட புத்தகங்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. இவையனைத்தும் தரமான நூல்கள் என்பது தான் குறிப்பிடத் தக்கது.

உறுப்பினராவது பற்றிய விவரம்.....

தனிப்பட்ட ஒருவருக்கு 200ரூபாய், ஒரு குடும்பத்திற்கு 300ரூபாய், மாணவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு 100ரூபாய், 10 வயதிற்கு குறைந்த சிறுவர்கள் மற்றும் 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு உறுப்பினர் தொகை கிடையாது. நூலகத்திலிருந்து படிக்க எடுத்து செல்லும் நூல்களுக்கு 10, 20, 30ரூபாய் என அவைகளுக்கு தகுந்த மாதிரி கட்டணம் வசூலிக்கப்படும். ஒன்று (அ) இரண்டு வாரங்கள் வரை அந்த புத்தகங்களை வைத்திருக்கலாம். புத்தகங்களை எடுத்து நூலகத்திலேயே அமர்ந்து படிப்பவர்களுக்கு எந்த கட்டணமும் கிடையாது. மிக குறைந்த கட்டணத்தில் சேவை மனப்பான்மையோடு இந்த நூலகத்தை தொடங்க வேண்டும் என்பதே என் குறிக்கோள். அதை நிறைவேற்றி வருகிறேன்.

தற்போது சுமார் 1200 உறுப்பினர்கள் உள்ளனர். உறுப்பினர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆங்கில கதை புத்தககளை விரும்பி எடுத்து செல்பவர்கள் அந்த நூல் பற்றிய கருத்துக்களை தவறாமல் எனக்கு தெரிவிக்கின்றனர். எனக்கு இந்த நூலகம் தற்போது வருமானத்தை கொடுக்கவில்லையென்றாலும் மனநிறைவை கொடுக்கிறது என்கிறார் விஜயராகவன்.

The Old Books Gallery and Lending Library,
121, St Mary's Road,
Abhiramapuram, Chennai-28.
Phone: 43536949 Mobile:9381801778.
Email: [email protected]

Share this Story:

Follow Webdunia tamil