Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நேர்காணல் : எட்வர்ட் சயீத்

நேர்காணல் : எட்வர்ட் சயீத்

Webdunia

எட்வர்ட் சயீத் ஒரு பாலஸ்தீனர்; விமர்சகர்; எழுத்தாளர். வாழ்வின் பெரும் பகுதியை ஐரோப்பா, அமெரிக்காவில் ஆசிரியப் பணியில் கழித்தவர். தற்போது நியூயார்க்கில் கொலம்பியா, பல்கலைக்கழகத்தில் இலக்கியப் பேராசிரியர். இவரது படைப்புகளில் சில: ORIENTALISM : COVERING ISLAM; THE QUESTION OF PALASTINE AND THE WORLD; THE TEXT AND THE CRITIC.

இந்த நேர்காணல் 1991-ம் ஆண்டு டப்ளினில் நடந்தது.



ரிச்சர்ட் கீர்னி : நீங்கள் ஐரோப்பியர் அல்ல. ஐரோப்பிய மரபு என்று குறிப்பிடும்படியான மரபு எதுவும் உள்ளதாக நீங்கள் கருதுகின்றீர்களா?

எட்வர்ட் சயீத் : இந்த விசயங்கள் ஐரோப்பிய முத்திரையைக் கொண்டவை என்று இனம் பிரித்துக் காட்டக்கூடிய அனுபவங்கள். அரசுகள், நாடுகள், மரபுகள் உள்ளன என்ற அர்த்தத்தில் மட்டுமே ஐரோப்பிய மரபு என்பது குறித்து பேச முடியும் என்று கருதுகிறேன். இக்கேள்வியை ஐரோப்பாவிற்கு வெளியில் உள்ள உலகத்தை தவிர்த்து விட்டுப் பார்க்கக் கூடாது என்றும் நினைக்கிறேன். அல்ஜீரியச் சூழலில் இதற்கு "ஒருவரின் இருத்தலுக்கு மற்றவர் பங்களிக்கும் விதத்திலான எதிரிகள்" என்ற சொல்லாடல் உள்ளது. ஐரோப்பாவிற்கும், பிறவற்றிற்கும் இடையில் பரஸ்பர உறவு உள்ளது. தன்னைப் "புனிதமாக" ஆக்கிக் கொள்ளும் முயற்சியில் தனக்கும் பிறருக்குமான தொடர்புகளையும் பிணைப்புகளையும் ஐரோப்பாவால் துண்டித்துக் கொண்டு விட முடியாது. இப்பிரச்சனை ஐரோப்பாவிற்கு ஒரு சவாலாகவே உள்ளது.

ரி.கீ. : இன்றைய ஐரோப்பிய "அறிவு ஜீவிகள்" பற்றிக் கூறுங்களேன்.

எ.ச. : "அறிவு ஜீவி" என்பவர் தன் வேலைக்குரிய சன்மானம் பெறும் தொழில் ஒன்றைச் செய்யக்கூடியவர் (யீசடிகநளiடியேட) என்ற கருத்து உள்ளது. இதனால் ஐரோப்பா, அமெரிக்காவில் அறிவு ஜீவிகள் அதிகார மையங்களை நோக்கி தன்னிச்சையாக ஈர்க்கப்படும் நிலை உள்ளது. இந்நாடுகளில் உள்ள அறிவு ஜீவிகள் தங்களை கருத்து உருவாக்குபவராக, கொள்கை உருவாக்குபவராக கருதிக் கொள்ளுகின்றனர்; கொள்கை விளக்கமளிப்பதை, கொள்கை உருவாக்கம் செய்வதைத் தங்களின் பணியாகக் கருதிக் கொள்கின்றனர். பிரக்ஞையை உயர்த்துவது, நெருக்கடிகளை, சிக்கல்களை அறிந்து கொள்வது, தன் சமூகத்திற்கான பொறுப்பை ஏற்பது போன்றவை அறிவு ஜீவியின் அடிப்படையான குணாம்சங்களாகக் கருதுகிறேன். இவற்றையே அறிவு ஜீவியின் பங்கு என்கிறேன். இது நிபுணத்துவம் சாராத பணியாகும். பல்வேறு துறைகளோடும் சம்பந்தப்பட்ட பிரச்சினையில் அவர் பங்காற்ற வேண்டியுள்ளது. தொழில் ரீதியிலான சொல்லாடல் குறித்து நமக்குத் தெரியும். இச் சொல்லாடல் புரிந்து கொள்ளப்பட முடியாத ஒரு சொல்லாடலாக ஆகிவிட்டது. இது குறித்து அறிமுகமானவர்களிடம் மட்டுமே பேசத்தகுந்ததாய், எவ்வித எதிர்ப்புமின்றி ஏற்றுக் கொள்ளக்கூடிய மனநிலையைப் பிறரிடம் ஏற்படுத்தி இறுதியில் பேசுபவரது நிலையை உயர்த்திக் கொள்ள வகை செய்யக் கூடியதாக இச்சொல்லாடல் உள்ளது. இதைக் கடுமையாக வெறுக்கிறேன். ஏனெனில் சமூகத்தில் இரண்டுவகை மனிதர்கள் உள்ளனர் என்று எனக்குப்படுகிறது. ஒருவர் சமூக நிகழ்வுகளை அதன் போக்கிலேயே நீடிக்கச் செய்பவர். மற்றவர் அறிவு ஜீவிகள். இந்த அறிவு ஜீவிகள் வித்தியாசகங்களையும் மாற்றங்களையும் தூண்டக் கூடியவர்.

ரி.கீ. : ஆக, சககுடிமகன் குறித்து அறிவு ஜீவிக்கு இருக்க வேண்டிய தார்மீகப் பொறுப்புணர்வை வலியுறுத்துகின்றீர்களா?

எ.ச. : ஆம், தார்மீகப் பொறுப்பு மிக அத்தியாவசியமானது.

ரி.கீ. : உலகைக் குழப்புவதாக அல்லது அசுத்தப்படுத்துவதாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்வீர்களா?

எ.ச. : அப்படியே இருக்கட்டுமே. நான் ஒரு பாலஸ்தீனன். பாலஸ்தீன தேசிய சமூகத்துடன் நான் பிணைக்கப்பட்டுள்ளேன் என்ற உணர்வு எனக்கு மிக முக்கியமானது. இப்பிணைப்பு பிறப்பினால் வந்தது என்ற போதிலும், பாலஸ்தீனப் பிரச்சினைக்கான காரணம் பரந்துபட்டதாக உள்ளது. இப்பிரச்சினை வெறுமனே தேசிய இனப்பிரச்சினை மட்டுமல்ல. அது, அராபியர், யூதர், அசிரீயர், பாபிலோனியர் உள்ளிட்ட செமிட்டிக் இனத்திற்கு எதிரான கலாச்சாரப் பிரச்சினையையும் உள்ளடக்கியது.

செமிட்டிக் இனத்திற்கு எதிரான ஐரோப்பிய பார்வையின் வாரிசுகளாக ஆக்கப்பட்டவர்கள் நாங்கள். அதாவது பலிகடாவாக ஆக்கப்பட்டவர்களின் பலிகடாக்கள் நாங்கள் - நீங்கள் விரும்பும் வார்த்தைகளில் கூறுவதானால். இப்பிரச்சினை மிகவும் சிக்கலானது. ஆனாலும், ஒரு தேசிய சமூகத்துடன் அல்லது ஒரு சமூகத்துடன் (அது ஒரு தேசியமாக இல்லாத போதிலும்) கொண்டுள்ள ஏதாவதொரு வகையான தொடர்பானது ஒருவரை நேர்மையானவராக நீடிக்கச் செய்கிறது என்றே கருதுகிறேன்.


ரி.கீ : நம்முடைய மரபுகளைக் கண்டுபிடித்து அல்லது மறு கண்டுபிடிப்புக்கு உட்படுத்தி, மரபுகளில் காணப்படும் புனைவுகளையும் குறியீடுகளையும் மறுஆய்வுக்கு உட்படுத்துவது என்ற தளத்தில் அறிவு ஜீவிக்கு சமூக, தார்மீகப் பங்குள்ளது என்கிறீர்களா? புதிய ஐரோப்பாவை உருவாக்குவது குறித்து அதிகமாகப் பேசப்படும் இச்சூழலில் புதிய கலாச்சார ஏகாதிபத்தியம் உருவாகிவிடும் அபாயம் உள்ளதா?

எ.ச. : 19-ம் நூற்றாண்டுகளில் நிலவிய ஐரோப்பிய ஏகாதிபத்தியத்துடன் ஒப்பிடக்கூடிய ஏகாதிபத்தியம் உருவாவதற்கான சாத்தியங்கள் பெருமளவில் இல்லை. அமெரிக்காவின் மறைமுக அதிகாரம், ஆதிக்கம் இவ்வகை ஏகாதிபத்திய உருவாக்கத்திற்கு தடையாக உள்ளது. அமெரிக்காவிற்கு - ஏதோவொரு வகையில் - எதிரான சக்தியாக ஐரோப்பா பார்க்கப்படுகிறது. குறைந்தபட்சம் அராபியப் பார்வையில் அப்படித்தான் படுகிறது. சில தெற்கு ஐரோப்பிய நாடுகள், வட ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையில் மத்திய தரைக்கடல் வழித்தொடர்புகள், ஏகாதிபத்திய வகைப்பட்டதாக இல்லாத கலாச்சாரப் பரிவர்த்தனைகள், முன் எப்போதையும் விட இரு பிராந்தியங்களுக்கு இடையில் கொடுக்கல் - வாங்கல் அதிகரித்துள்ளது போன்ற நிலைமைகள் இக்கருத்துக்கு அடிப்படையாகும்.

ரி.கீ. : மரபு ரீதியான பிறரை, - எடுத்துக்காட்டாக அராபிய அல்லது இஸ்லாமிய உலகை - தன்னுள் ஒருவராக ஏற்றுக் கொள்வதில் ஐரோப்பா வெற்றி கண்டு விட்டது எனக் கருதுகின்றீர்களா?

எ.ச. : நான் அவ்வாறு கருதவில்லை. அதில் பிரச்சனை உள்ளது. இத்தாலியை எடுத்துக் கொள்வோம். தன்நாட்டில் உள்ள 10 லட்சம் முஸ்லீம் மக்களால், தான் நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாக அது கருதுகிறது. இந்த முஸ்லீம்கள் வட ஆப்பிரிக்கா, லிபியா, டூனிஸ், எகிப்து போன்ற நாடுகளிலிருந்து குடியேறியவர்கள். பிரான்சில் குடியேறியுள்ள 20 அல்லது 30 லட்சம் முஸ்லீம்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில் இத்தாலியிலோ ஏற்றுக் கொள்ளப்படாத நிலை. இது அங்கு அரசியல் பிரச்சினையாக மாறியுள்ளது. இப்பிரச்சினை குறித்து கலந்துரையாடல்களோ விவாதங்களோ இத்தாலியில் நடைபெறவில்லை; மவுனமே. மாறாக பிரான்சின் தீவிர வலதுசாரியான லீபென் (LePen) க்கும் அவரது மிகத்தாராளவாத எதிர்ப்பாளர் சிலருக்கும் இடையே நடந்து வரும் மோசமான விவாதங்களைப் போன்ற ஒன்று நடைபெற்றால் கூட வரவேற்கத்தக்கதே. இருப்பினும், முஸ்லீம்களின் இருத்தல் விவாதங்கள், விழிப்புணர்வை ஏற்படுத்தவே செய்யும். "அராபியர்களுக்கும் மேற்கத்தியர்களக்கும் இடையிலுள்ள" நீண்ட பகையுணர்வை அழிக்கக் கூடிய வகையில் இருவருக்கும் இடையில் கலந்துரையாடல், பரிவர்த்தனைகளை தீவிரமாக ஆதரிக்கின்ற பல எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், அறிவு ஜீவிகளை அராபிய நாடுகளில் தற்போது காணமுடிகிறது. மாறாக, இப்படியான விசயங்கள் அமெரிக்காவில் இல்லை. அராபிய நாடுகளுடன் அல்லது இஸ்லாத்துடன் அல்லது அடிப்படைவாதம் அல்லது இதைப்போன்ற ஒன்றுடன் இன்றளவும் யுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா கருதிக் கொள்கிறது. எனவே இங்கு கலாச்சாரப் பிரச்சினைகள் குறித்து எதுவும் பேசப்படுவதில்லை.

ரி.கீ : மத்திய தரைக்கடல் பகுதி ஐரோப்பிய நாடுகள், அராபிய நாடுகளுடன் குடியேற்றம், கலாச்சாரத் தொடர்புகளைக் கொண்டுள்ளன. ஆனால் பருண்மையான அரசியல் பிரச்சனைகளில் - குறிப்பாக வளைகுடா யுத்தத்தில் இந்த ஐரோப்பிய நாடுகள் யுத்தத்தை தடுத்து நிறுத்த முடியவில்லையே? - எதையும் சாதித்துவிடவில்லையே?

எ.ச. : அதுமட்டுமா. இங்கிலாந்து பேராசையுடன் (Avidly) வெளிப்படையாகவே போரில் கலந்து கொண்டது. மாறாக, வளைகுடாப்போர் முடிந்தபிறகு, இப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியிலான தீர்விற்குப் பதில் அரசியல் ரீதியான தீர்வைக் கொண்டு வரும் முயற்சியில் இத்தாலியும், பிரான்சும் தரகர்களாகச் செயல்பட முற்பட்டன. வளைகுடாப் பகுதியில் நிலவிவரும் ஒட்டுமொத்த சூழலுக்காக இல்லாமல் மையப் பிரச்சினையான பாலஸ்தீனப் பிரச்சினையில் சமரசமானதொரு அரசியல் ரீதியான தீர்வை ஏற்படுத்துவதில் இத்தாலியர்கள் ஆரம்பம் முதலாக முனைப்புக் காட்டி வருகின்றனர். ஆனாலும் பல்வேறு காரணங்களால் அவர்களால் அமெரிக்காவை எதிர் கொள்ள முடியவில்லை. இம்முயற்சிகள் ஐரோப்பாவின் முயற்சிகள் என்றில்லாமல் தனிப்பட்ட முயற்சிகளாகவே மேற்கொள்ளப்படுகின்றன. நான் கூற வருவது என்னவெனில் ஐரோப்பிய ஆலோசனை சபை மிக நல்ல நிலைப்பாடுகளை எடுத்துள்ளது.

தனித்தனியாகக் கட்டுண்டுள்ள இவர்கள் ஒன்றுபட்ட சமூகமாக செயல்படுவதில்லை. ஒருபுறம் அமெரிக்காவின் நிர்ப்பந்தம்; மறுபுறம் இப்போதுள்ள நிலைமையில் எவ்விதமான மாற்றத்தையும் எதிர்க்கின்ற பழமைவாத, பிற்போக்கு அராபிய அரசுகளிடம் எண்ணெய் பெறவேண்டிய நிலை. இதனால் ஐரோப்பியர்களின் நிலைப்பாடு உறுதியாக இருப்பதில்லை. ஆனாலும் கலாச்சாரத் தளத்தில் இந்நாடுகளுக்கு இடையில் முற்போக்கான பரிமாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கான இயக்கங்கள் பெருமளவில் காணமுடிகிறது.

ரி.கீ. : "கிழக்கு பற்றிய" ஒரு பார்வை குறித்து நிறைய பேசியுள்ளீர்கள். இது அடிப்படையில், அரேபிய உலகைப் பற்றி ஐரோப்பா, மேற்கு நாடுகள் அச்சுப்பதித்தது போன்றதொரு மனப்பான்மை கொண்டுள்ள கலாச்சாரப் போக்கை குறிப்பது, இது பற்றிக் கூறுங்களேன்.

எ.ச. : இது மிகத் தீவிரமாக உள்ளது. இதைப் புரிந்து கொள்வதற்கு ஆதிக்க மனப்பான்மை கொண்ட பத்திரிக்கைகளைப் பார்க்க வேண்டியதில்லை. தி டைம்ஸ் பத்திரிக்கையில் ஊடீசூடீசு ஊசுருஐளுநு, ீ'க்ஷசுஐநுசூ போன்றோரின் எழுத்துக்களைப் பார்த்தாலே போதுமானது. இவர்கள் முஸ்லீம்கள் பற்றி எழுதும்போது ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளுக்குள் திருமண உறவுகள் செய்து கொள்ளும் கேவலமானவர்கள் என்று எழுதுகின்றனர். அராபியர்களை வன்முறையாளர்களாகச் சித்தரிக்கின்றனர். னுயஎனை ஞசலஉந துடிநேள என்பவர் கhந ஊடடிளநன ஊசைஉடந என்ற புத்தகத்தில் அராபிய இனத்தைச் சித்தரித்துள்ளதைப் போல வேறு எந்த கலாச்சாரக் குழுவையும் எழுத முடியுமா என்று எனக்குத் தோன்றவில்லை.

ரி.கீ. : இதுவும் ஒருவகை இனவாதம்தானே?

எ.ச. : ஆம். இது சுத்தமான இனவாதமாகும். இது பிறர்குறித்த எவ்வித காரணமுமற்ற அச்சத்தின் விளைவான நோய் (ஓnடியhடிbயை), பிறர் தங்களைத் திட்டமிட்டு தவறாக நடத்துகின்றனர் என்ற மனப்பிரமை (ஞயசnடினை), மனப்பிறழ்வின் அதீதம் (னுநடரiடியேட குயவேயளல).


ரி.கீ. : ஐரோப்பாவிற்கு இதற்கான தேவை எங்குள்ளது?

எ.ச. : ஐரோப்பாவைப் பொருத்தளவில் அதன் தலைவாசலில் இஸ்லாம் உள்ளது. இன்னொன்றையும் மறந்துவிடக்கூடாது. ஐரோப்பிய வகைப்பட்டதாக இல்லாத கலாச்சாரங்களில் இஸ்லாம் மட்டுமே முற்றாக அழிந்துவிடாமல் இன்றளவும் நீடிக்கிறது. யூத, கிறித்துவ மதங்களுக்கு நெருக்கமாகவும், ஒன்றே கடவுள் என்ற பாரம்பரியத்தைக் கொண்டதாகவும் இஸ்லாம் உள்ளது. நீடித்து வரும் உரசல்களுக்கான காரணம் இதுவே. இந்தியாவிலுள்ள ஆங்கிலேயர்களின் பிரச்சினை ஏற்கனவே தீர்க்கப்பட்டதைப் போல இங்கு தீர்க்கப்படவில்லை.

இஸ்லாமிய, அராபிய உலகு குறித்த தனது எதிர்நிலைப்பாட்டிலிருந்தே மேற்கத்திய கருத்து உருவாகியுள்ளது என்றே நான் கூறுவேன். இக்கருத்து அநேகமாக இறையியல் விசயங்களை அடிப்படையாகக் கொண்டதாகும். ஆபிரகாம், மோசஸ், ஏசு போன்றோரில் தொடங்கும் தேவதூதப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக தன்னைப் பார்த்து முகமது நபியை யூத, கிறித்துவ மதங்கள் தோன்றிய அதே மண்ணில் மேலெழும்பி வநத, அச்சுறுத்தக்கூடிய வெளிப்பாடாகவே பார்த்தனர். 7,8-ம் நூற்றாண்டுகளில் இஸ்லாத்திற்கு எதிரான பிரச்சினைகள் இதுவாகவே இருந்தது. இது ஒரு தனி வகைப்பட்ட பிரச்சினை என்றே கருதுகிறேன். இக்கலாச்சாரப் போட்டி மனப்பான்மை ராணுவ நடவடிக்கையால் மேலும் கூர்மைப்படுத்தப்படுகிறது. பொருளாதார, அரசியல் நடவடிக்கைகளும் இப்போட்டியை விசிறிவிடுகின்றன. இப்போட்டிகளில் பெருமளவு அறியாமை நிலவுகிறது. முஸ்லீம், ஐரோப்பியர்களுக்கு இடையில் நிலவக்கூடிய பருண்மையான அனுபவங்களை பகுத்துணர்வதற்கு மக்களுக்கு வாய்ப்பளிக்கப்படுவதில்லை. யதார்த்தத்தில் இந்த அனுபவங்கள் மென்மையான காழ்ப்புணர்வைத் தாண்டி மிகவும் சிக்கலானதாக உள்ளது. கிரேக்க தத்துவம் முஸ்லீம்களுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டு பின்பு அது இங்கிருந்து மேற்கிற்கு பரிமாற்றம் செய்யப்பட்டது. ஐரோப்பிய வரலாறு இஸ்லாமிய அறிவியலைச் சார்ந்திருப்பது போன்றவற்றிலிருந்து இவர்களுக்கிடையில் உள்ள சார்புத் தன்மையைப் பார்க்க முடியும்.

ரி.கீ. : அவிசன்னா, அவாரோஸ் போன்ற அராபியச் சிந்தனையாளர்கள், CORDOBA SCHOOL, ANDALUSIAN SCHOOL போன்ற அராபிய தத்துவ மையங்கள், இந்த சிந்தனைப் பரிமாற்றத்தில் ஆற்றியுள்ள பெரும்பங்கு தத்துவ வாதியான என்னை மிகவும் பாதிக்கிறது.

எ.ச. : நீங்கள் கூறுவது முற்றிலும் சரியே. பல்கலைக்கழகம் பற்றிய கருத்து அராபிய உலகில் உருவானதே. The collegium என்றழைக்கப்படும் கல்லூரி பற்றிய கருத்தும் உண்மையில் இஸ்லாமியக் கருத்தே.

ரி.கீ. : ஐரோப்பிய, அராபிய உலகுகளுக்கிடையிலான மோதல்களுக்கு சமீபகாலத்தில் பிரபலமான பல உதாரங்களைக் காட்ட முடியும். வளைகுடாப் போரை மட்டும் இங்கு நான் கூறவில்லை. ஐரோப்பாவிற்குள்ளேயே நிலவக்கூடிய முரண்பாடுகளையும் இங்கு கவனத்தில் கொள்கிறேன். சல்மான் ருஷ்டி பிரச்சினையில் ஒட்டுமொத்த சமூகத்துக்கான உரிமைக்கும் (Universal Rights) வேறுபடுவதற்குமான உரிமைக்கும் இடையில் உள்ள பிரச்சினை மையப்படுத்தப்பட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. பிரான்சின் மதச்சார்பற்ற பள்ளிகளில் முஸ்லீம் பெண்கள் பர்தா அணியும் பிரச்சினையும் இங்கு நான் கவனத்தில் கொள்கிறேன். அரேபியா பல நூற்றாண்டுகளாக ஐரோப்பாவின் காலனியாக இருந்ததால் ஐரோப்பாவில் குடியேற அராபியர்களுக்கு உரிமை உண்டு. ஐரோப்பாவில் குடியேறும் அராபியர்கள் தங்களின் மத, கலாச்சார வித்தியாசகங்களை கைவிட்டுவிட்டு புதிய ஐரோப்பா எனப்படும் இந்த மதச்சார்பற்ற, அனைவருக்குமான இடத்து நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற பொதுவான வாதம் முன் வைக்கப்படுகிறதே?

எ.ச. : பேச்சுரிமைக்கான உலகளாவிய கோட்பாட்டிற்கே முஸ்லீம்கள் உள்ளிட்ட அனைவரும் நடந்து கொள்ளத்தான் வேண்டும். அராபிய உலகில் "மதரீதியிலானவர்கள்" என்று கருதப்படுபவர்களுக்கும் "மதச்சார்பற்ற" சக்திகளுக்கும் இடையில் உயிர் நாடியான போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது என்பது முக்கியானது என்கிறேன். மதச்சார்பற்ற சக்திகளுடன் என்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளேன். பாகிஸ்தான், வங்காளம் போன்ற இஸ்லாமிய நாடுகள் அனைத்தைப் பற்றியும் என்னால் பேச முடியாது.

அடிப்படைவாதம் குறித்து தொலைக்காட்சியில் அடிக்கடி விவாதிக்கப்படுகிறது. அராபிய, இஸ்லாம் நாடுகளில் நடைபெறும் எல்லா விசயங்களையும் அடிப்படைவாதத்தோடு தொடர்புபடுத்திப் பார்ப்பது தவறு என்கிறேன். அராபிய உலகம் பலவாறாக உள்ளது. அங்கு ஒரு விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கு மதரீதியான மாற்றுகள் தோல்வியைக் தழுவும் நிலைமை உருவாகிவருவதாக கருதுகிறேன். முஸ்லீம்கள் என்பதில் பொருள் உள்ளது. ஆனால் முஸ்லீம் பொருளாதாரம், முஸ்லீம் வேதியியல் என்பதில் என்ன பொருள் இருக்கிறது. வேறு வார்த்தையில் கூறினால் நவீன அறிவியல், அரசை நடத்துவதற்கு உலகளாவிய நியதி உள்ளது.

மத அடிப்படையில் இல்லாமல் மேற்கை எதிர்க்கின்ற இஸ்லாமியர்களை எப்படிப் பார்ப்பது என்பதே இப்போதைய கேள்வி. காஸா (GAZA) பகுதியின் மேற்குக்கரையோரம் வாழும் மக்கள் தங்களை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடும் இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று கருதிக் கொள்கின்றனர். ஏனெனில் இஸ்ரேலியர் ஊடுருவ முடியாத கடைசிப் பகுதி அது. இவர்கள் பிரெஞ்சு ஆக்கிரமிப்பிலிருந்த அல்ஜீரிய மக்களைப் போன்றவர்கள்.

க, இஸ்லாமும் மதச்சார்பின்மையும் பலவாறாக உள்ளது. சல்மான் ருஷ்டி பிரச்சினையில் தான் நினைத்ததை எழுதுவதற்கு அவருக்குள்ள உரிமையை நான் உள்ளிட்ட பல அராபிய எழுத்தாளர்களும் அறிவுஜீவிகளும் வெளிப்படையாகவே ஆதரித்துள்ளோம். இது மிக முக்கியமானது. இங்கு இன்னொன்றையும் வலியுறுத்த விரும்பினோம். அரசியல் ரீதியான நிலை எடுத்தார்கள் என்ற காரணம் காட்டி பத்திரிகையாளர்கள், நாவலாசிரியர்கள் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில் பலர் முஸ்லீம் எழுத்தாளர்கள். புத்தகங்கள் தடை செய்யப்படும் பிரச்சினைக்கு வருவோம். இஸ்ரேலிய சட்டங்களின் காரணமாக காஸாவின் மேற்குக் கரைப்பகுதியில் பிளாட்டோவின் "குடியரசு" அல்லது சேக்ஸ்பியரின் "ஹாம்லட்" புத்தகங்களை வாங்கவோ படிக்கவோ முடியாது என்பதயும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்கிறோம். என்ன காரணங்களுக்காக தடை செய்யப்பட்டன என்று புரிந்து கொள்ள முடியாதபடி நூற்றுக்கணக்கான புத்தகங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. சல்மான் ருஷ்டிக்காகப் பரிந்துபேசும் மேற்கத்திய எழுத்தாளர்கள் - அவர்கள் செயல்பட்டதில் எனக்கு மகிழ்ச்சியே, நானும்கூட இவர்களோடு சேர்ந்து குரல் கொடுத்தேன் - மேற்குக்கரை, காஸாப் பகுதி பாலஸ்தீன மக்களின் பேச்சுரிமை, எழுத்துரிமை என்று வரும்போது எங்கு போய்விடுகறிhர்கள்? பாலஸ்தீனர் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதே கூட இங்கு தண்டனைக்குரிய குற்றம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த சொல்லை உச்சரித்தால் ஆறுமாதம் சிறைவாசம். இங்கு அனைத்துப் பிரச்சனைகளிலும் ஒரே விதமான அளவுகோலே கடைப்பிடிப்பதாக ஏன் கபடவேடம் போடவேண்டும்? உங்களோடு நாங்களும் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். நாம் அவைகளக்கு எதிராகவும் போராட வேண்டும். ஆனால் நமது போராட்டம் `எல்லா' முனைகளிலும் இருக்க வேண்டும்.



Share this Story:

Follow Webdunia tamil