சிம்புவுக்கு இன்று திருநாள். அவரது ரசிகர்களுக்கும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் நடித்த படமொன்றில் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
செல்வராகவன் இயக்கத்தில் கான் என்ற படத்தில் சிம்பு நடித்து வருகிறார். தாப்ஸி, கேத்ரின் தெரேசா என இரு ஹீரோயின்கள். வருண் மணியன் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசை. ஒளிப்பதிவு அர்விந்த் கிருஷ்ணா.
இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை இன்று வெளியிட்டுள்ளனர். நீண்ட நாள்களுக்குப் பிறகு சிம்பு படம் ஒன்றின் பர்ஸ்ட் லுக் வெளியாவதால் அவரது ரசிகர்கள் திருவிழா மனநிலையில் இருக்கிறார்கள்.
சிம்புவின் “கான்” ஆங்கில ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!