Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லீக்கானது வலிமை பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்... ரசிகரின் கைவண்ணத்தில் உருவானதா?

Webdunia
வியாழன், 30 ஏப்ரல் 2020 (18:35 IST)
தல அஜித் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் 'வலிமை'படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று கொரோனா வைரஸ் காரணத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக உள்ளார். நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய அதே குழுவினரே வலிமைப் படத்திலும் பணியாற்றுகிறார்கள்.

அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஹுமா குரேஷியும் போலீஸ் அதிகாரியாகவே நடித்துவருகிறார். இரட்டை வேடத்தில் நடிக்கும் அஜித் பைக் ரேஸராக மற்றொரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதிரடி ஆக்ஷன் காட்சிகளும், பைக் ரேஸ் காட்சிகளும் நிறைந்து வருகிற பொங்கல் தினத்தில் வெளியாக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது

இந்நிலையில் தற்போது இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகிறது. அஜித் ரசிகர் உருவாக்கியுள்ள இந்த போஸ்டருக்கு எக்கச்சக்க லைக்ஸ் குவிந்து வருவதுடன் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது. பக்காவாக உருவாக்கப்பட்ட இந்த போஸ்டர் ஃபேன்மேட் என்றாலே நம்பமுடியவில்லை அந்த அளவுக்கு அற்புதமாக உள்ளது. இந்த போஸ்டரை உருவாக்கிய ரசிகர் தயாரிப்பு நிருவத்திற்கு இதை அனுப்பிவைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செல்லத்த காட்டாம ஏமாத்திட்டீங்களே! திஷாவின் கவர்ச்சி டான்ஸை கட் செய்த ஐபிஎல்! - சோகத்தில் ரசிகர்கள்!

ஐபிஎல் 2025: முதல் போட்டியில் பெங்களூரு அபார வெற்றி.. விராத் கோலி அபார பேட்டிங்..!

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

வருண் தவானை மன்னித்த பூஜா ஹெக்டே.. நடுவானில் விமானத்தில் நடந்தது என்ன?

இன்னும் 75 நாட்களில் ரிலீஸ்.. ‘தக்லைஃப்’ சூப்பர் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments