கிரிக்கெட் வீராங்கனையாக டாப்ஸி "சபாஷ் மித்து" பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்!

Webdunia
புதன், 29 ஜனவரி 2020 (12:13 IST)
முன்னணி நடிகைகள் பெரும்பாலும் பெரிய ஹீரோக்களுடன் டூயட் படி நடிப்பதை விட வித்தியாசமான முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் நடிகை டாப்ஸி தற்போது  இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை மித்தாலி ராஜ் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வருகிறார். 
 
மித்தாலி ராஜ். 1999-ம் ஆண்டிலிருந்து இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருகிறார். மகளிர் கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி இந்தியாவின் சிறந்த வீராங்கனையாக பார்க்கப்படும் இவர் கிரிக்கெட் போட்டியில் 20 ஆண்டுகளைக் கடந்த ஒரே வீராங்கனை என்ற பெயரும் எடுத்து இந்திய மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார். 
 
இந்நிலையில் தற்போது இவரது வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வருகிறது. இதில் நடிகை டாப்ஸி மித்தாலி ராஜ் ரோல் ஏற்று நடிக்கிறார். 'சபாஷ் மித்து' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை  'லம்கே', 'பர்சானியா' மற்றும் 'ராயீஸ்' உள்ளிட்ட படங்களை இயக்கிய ராகுல் தொலாகியா இயக்கவுள்ளார். வயகாம் 18 நிறுவனம்  தயாரித்து வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் படக்குழு வெளியிட்டுள்ளனர். இந்த படம் 2021ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

KGF 3 படம் எப்போ வரும்?.. யாஷ் கொடுத்த புது அப்டேட்..

நான் ஹீரோவாக நடிக்கிறேனா?... சாய் அபியங்கர் விளக்கம்

முதல் காட்சியிலேயே கதை தொடங்கிவிடும்.. தயவுசெய்து லேட்டா வராதீங்க - 'கர' பட இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் வேண்டுகோள்!

நாளை வெள்ளியங்கிரி மலை, கோவை குற்றாலம் செல்ல தடை: போலீசார் அறிவிப்பு..!

ஒரு வழியா ஜெயிலர் 2 ஷூட்டிங் முடிஞ்சி போச்சி!.. வெளியான போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments