Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கௌரி கிஷனின் மூன்று முகம் "மறையாத கண்ணீர் இல்லை" புதிய போஸ்டர்!'

Webdunia
திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (14:38 IST)
96 படத்தில் பதின்பருவ ஜானுவாக நடித்த கௌரி கிஷன் ஒருப் புதியப் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலிஸான 96 படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

வழக்கமான மசாலா அம்சங்கள் எதுவும் இல்லாமல் காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட இந்தப் படம் வெற்றியடைந்ததற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று, சிறுவயது ராம் ஜானுவாக நடித்த ஆதித்யா மற்றும் கௌரியின் நடிப்பும் ஆகும். இதை எடுத்து நிறைய குறும்படம் மற்றும் ஆல்பம் பாடல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும்  கௌரி கிஷனுக்கு "மறையாத கண்ணீர் இல்லை" என்ற புதிய போஸ்டர் வெளியிட்டுள்ளார்.

இதில் அழுகை , அமைதி , சிரிப்பு என மூன்று விதமான உணர்ச்சிகளில் வெவ்வேறு தோற்றத்தில் கௌரி தோன்றியுள்ளார். தினேஷ் இளங்கோ மற்றும் அட்சய் SV இயக்கத்தில் உருவாகும் இந்த படைப்பிற்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். சூப்பர் சிங்கர் புகழ் பாடகி ஸ்ரீநிஷா ஜெயசீலன் பாட விஷ்ணு எடவன் லிரிக்ஸ் எழுதியுள்ளார். இது ஒரு ஆல்பமாக இருக்கலாம் என ரசிகர்கள் யூகித்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

4 நாட்கள் தொடர் விடுமுறையில் ரிலீஸ் ஆகும் ‘கூலி’.. சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஜொலிக்கும் அழகில் மிரட்டல் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

பாக்ஸிங் க்யூட்டி ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இந்த படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க போராடினேன்… வீர தீர சூரன் ஹிட் குறித்து விக்ரம் மகிழ்ச்சி!

மூத்த நடிகர் அவர்கள் ரவிகுமார் காலமானார்… திரையுலகினர் அஞ்சலி!

அடுத்த கட்டுரையில்
Show comments