Publish Date: Mon, 19 Jun 2017 (18:07 IST)
Updated Date: Mon, 19 Jun 2017 (18:10 IST)
தளபதி படத்தின் பட்ஜெட் அதிகம் எகிற, இதுதான் காரணம் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.
தளபதியை வைத்து போன படத்தை ஹிட் கொடுத்த இளம் இயக்குநர், மறுபடியும் அவரை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். தளபதி மூன்று வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக மூன்று ஹீரோயின்கள் நடித்து வருகின்றனர். அதுமட்டுமல்ல, மூன்று காமெடியன்களும் நடித்து வருகின்றனர்.
இந்தப் படத்தின் பட்ஜெட், ஆரம்பத்தில் பிளான் செய்ததைவிட கன்னாபின்னாவென்று எகிறியிருக்கிறதாம். இளம் இயக்குநரின் கடந்த இரண்டு படங்களில் வேலைசெய்த ஒளிப்பதிவாளரைத் தூக்கிவிட்டு, இந்தப் படத்தில் புதிதாக ஒரு ஒளிப்பதிவாளரை கமிட் செய்திருக்கிறாராம் இயக்குநர். இத்தனைக்கும் கடந்த இரண்டு படங்களுமே ஹிட். அப்படியிருந்தும் அவரைத் தூக்கிவிட்டு, புது ஒளிப்பதிவாளரைத் தன் இஷ்டத்துக்கும் ஆட்டி வைப்பதால்தான் பட்ஜெட் எகிற காரணம் என்கிறார்கள்.