கடந்த 25 வருடங்களாக திரையுலகில் 'இளையதளபதி' என்ற பட்டத்துடன் வலம் வந்த விஜய், 'மெர்சல்' படம் மூலம் திடீரென தளபதியாக மாறிவிட்டார். சூப்பர் ஸ்டார் பட்டத்தை விட ரசிகர்கள் கொடுத்த 'இளையதளபதி' என்ற பட்டம் தான் தனக்கு பெரிது என்று விழா ஒன்றில் கூறிய விஜய், தற்போது 'தளபதி'யாக மாறுவதற்கு ஒரு பழிவாங்கல் இருப்பதாக கூறப்படுகிறது.
'சுறா', 'வேட்டைக்காரன்' என விஜய் படங்களை அடுத்தடுத்து ரிலீஸ் உரிமையை பெற்ற சன் மூவீஸ் நிறுவனம் வேண்டுமென்றே அந்த படங்களை ரிலீஸ் செய்யாமல் காலம் தாழ்த்தியது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஒருமுறை எஸ்.ஏ.சி, சன் மூவீஸ் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு 'தளபதி' ரொம்ப வருத்தத்தில் இருக்கின்றார், உடனே படத்தை திரையிடுங்கள் என்று கேட்டுக்கொண்டாராம். அதற்கு அந்த பக்கத்தில் இருந்து வந்த பதில், 'எங்களுக்கு தெரிந்து ஒரே தளபதி ஸ்டாலின் தான், அவர் ஒன்றும் வருத்தப்பட மாட்டார்' என்று கூறி போனை வைத்துவிட்டார்களாம்
அன்று அவமானப்பட்ட எஸ்.ஏ.சி, அந்த 'தளபதி' பட்டத்தை கைப்பற்றவே இந்த முறை போஸ்டரில் அந்த டைட்டிலை போடச்சொன்னாராம். இந்த தளபதிக்கு பின்னால் இவ்வளவு பெரிய பழிவாங்கல் இருந்ததை அறிந்த கோலிவுட் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது.