Publish Date: Tue, 28 Mar 2017 (15:34 IST)
Updated Date: Tue, 28 Mar 2017 (15:37 IST)
தொடர் பிரச்சனையால் பட்டதாரி நடிகர் ஆன்மீகம் பக்கம் திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான பட்டதாரி நடிகர் கடந்த சில நாட்களாக பல பிரச்சனைகளில் சிக்கி தவித்து வருகிறார். பால் நடிகை தொடங்கி லீக்ஸ் வரை பெரிய சிக்கலில் சிக்கி தவித்தார்.
இது ஒருபுறம் இருக்க பட்டதாரி நடிகர் தான் எங்கள் மகன் ஒரு தம்பதியினர் தொடர்ந்த வழக்கு பெரும் உச்சக்கட்டத்தை நெருங்கி அவரை ஆட்டி வைத்தது.
இதையடுத்து தன்னை வாட்டிவதைக்கும் இந்த பிரச்சனைகளில் இருந்து மீள என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த நடிகர் தற்போது ஆன்மீகம் பக்கம் திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதை அவரது குடும்ப ஜோசியர் ஒருவர் மூலமாக கிடைத்த ஆலோசனையாம். மாமனார் படத்தின் பெயர், அவரது ஸ்டைல் என அனைத்தையும் படத்தில் சுட்டு நடித்ததோடு மட்டுமல்லாமல் தற்போது அவரைப்போலவே ஆன்மீகம் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளார் பட்டதாரி நடிகர்.
Abimukatheesh
Publish Date: Tue, 28 Mar 2017 (15:34 IST)
Updated Date: Tue, 28 Mar 2017 (15:37 IST)