Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழை முந்தியது தெலுங்கு: ’ராட்சசன் 2’ படத்தில் விஜய்சேதுபதி?

தமிழை முந்தியது தெலுங்கு: ’ராட்சசன் 2’ படத்தில் விஜய்சேதுபதி?
, புதன், 14 ஜூலை 2021 (09:41 IST)
கடந்த 2018 ஆம் ஆண்டில் தமிழில் வெளியான ’ராட்சசன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மிக விரைவில் உருவாக இருப்பதாகவும் இதற்கான கதையை இயக்குனர் ராம்குமார் தயார் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த படம் இன்னும் அறிவிப்பு வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ராட்சசன் படத்தை ஏற்கனவே தெலுங்கில் ரீமேக் செய்த இயக்குனர் ரமேஷ் வர்மா, ராட்சசன் இரண்டாம் பாகத்தை தொடங்க இருப்பதாகவும் இதற்கான கதை தயாராகி விட்டதாகவும் கூறப்படுகிறது 
 
ராட்சசன் இரண்டாம் பாகத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகவும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. விஜய் சேதுபதி ஏற்கனவே தமிழ் தெலுங்கு மலையாளம் பாலிவுட் என பிஸியாக இருக்கும் நிலையில் மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்ப்போம்
 
இந்த நிலையில் ராட்சசன் 2’ தமிழ் திரைப்படத்தின் பணிகளும் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாசியோகம் பற்றி அறிந்துகொள்வோம்!