Publish Date: Sat, 17 Jun 2017 (17:45 IST)
Updated Date: Sat, 17 Jun 2017 (17:47 IST)
தொடர்ந்து தோல்விப் படங்களாகக் கொடுத்து வருவதால், வாரிசு நடிகருக்கு சுத்தமாக மார்க்கெட் இல்லையாம்.
கலைக் குடும்பத்தில் இருந்து மூன்றாவது தலைமுறையாக நடிக்க வந்தவர் மூக்கு பெருத்த ஹீரோ. இவருடைய தாத்தா, ‘நடிகர் திலகம்’ எனப் பெயரெடுத்தவர். இவர் அப்பா நடித்த பல படங்கள் வெற்றி விழா கண்டவை. ஆனால், இந்த ஹீரோ நடித்த முதல் படத்தைத் தவிர, மற்ற எல்லா படங்களுமே தோல்விப் படங்கள்தான்.
இருந்தாலும், வரிசையாக வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. காரணம், அறிமுகமாகும்போது 7 கோடி ரூபாயாக இருந்த அவருடைய மார்க்கெட் வேல்யூ, தற்போது ஒரு கோடி ரூபாயாகக் குறைந்துவிட்டதாம். அதற்கும் ஆள் வராததால், சொந்தமாகத் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்துவிட்டார் ஹீரோ.