Publish Date: Sun, 15 Oct 2017 (18:28 IST)
Updated Date: Sun, 15 Oct 2017 (18:32 IST)
சிவ நடிகரைப் போல தானும் சினிமாவில் ஜொலிக்கலாம் என்று நினைத்தவருக்கு பயங்கர சறுக்கல் கிடைத்துள்ளது.
டிவியில் இருப்பவர்கள் சினிமாவுக்குப் போனால், அவர்களைக் கண்டு கொள்ளவே மாட்டார்கள். ஆனால், அந்த சரித்திரத்தை மாற்றி எழுதியவர் சிவ நடிகர். நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து ஹீரோ ஆனவர், இன்று மார்க்கெட்டில் முன்னணியில் உள்ளார். அவர் படங்களுக்கு மிகப்பெரிய மவுசு ஏற்பட்டுள்ளது.
அவரைப் பார்த்து மூன்று இனிஷியலைக் கொண்ட நிகழ்ச்சித் தொகுப்பாளரும் சினிமாவில் ஹீரோவாக நடித்தார். ஆனால், சிவ நடிகர் அளவுக்கு ஒர்த் இல்லாததால், அவர் நடித்த படங்கள் எதுவும் ஓடவில்லை. நல்லவேளை, சினிமாவை நம்பி டிவியைக் கைவிடாமல் இருந்ததால், டிவியிலேயே தற்போது பிழைப்பு நடத்தி வருகிறார்.