Publish Date: Wed, 26 Apr 2017 (14:47 IST)
Updated Date: Wed, 26 Apr 2017 (14:55 IST)
சின்ன நம்பர் நடிகையும், பெரிய நம்பர் நடிகையும் கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் நடித்து வருகின்றனர். சில வருடங்கள் ஆனாலே அக்கா, அண்ணி கேரக்டர்கள் தரும் தமிழ் சினிமாவில், இத்தனை வருடங்களாக ஹீரோயினாகவே அவர்கள் நடித்து வருவது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி போட்டுள்ள இந்த நடிகைகள், தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படங்களாகப் பார்த்து நடித்து வருகின்றனர். ஆளுக்கு நான்கைந்து படங்கள் இப்படி கைவசம் வைத்திருக்கின்றனர். ஆனால், சமீபத்தில் வெளியான இரண்டு நடிகைகளின் படங்களும் எதிர்பார்த்த ரிசல்ட்டைத் தரவில்லை. இதனால் கலக்கத்தில் இருக்கும் நடிகைகள், ஒழுங்காக ஹீரோக்களுக்கு ஜோடியாக டூயட் பாடினாலே பரவாயில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்களாம்.