Publish Date: Sat, 22 Apr 2017 (16:43 IST)
Updated Date: Sat, 22 Apr 2017 (16:47 IST)
’நான் திருந்திவிட்டேன்’ என வம்பு நடிகரே வாக்குமூலம் தந்தாலும், கோடம்பாக்கத்தில் அவரை நம்புவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆனாலும், அவருடைய திறமைக்கு எப்போது மரியாதை உண்டு. அதனால்தான், ஒருசில இயக்குநர்களாவது அவரை வைத்து படம் பண்ண ஆசைப்படுகிறார்கள். ஆனால், வம்பு பண்ணும் அலப்பறையில் அந்த ஆசையே போய்விடுகிறது அவர்களுக்கு.
காதலைக் குறிக்கும் மலையாள வார்த்தையை தலைப்பாகக் கொண்டு மெஹா ஹிட் படத்தைக் கொடுத்த இயக்குநர் அவர். வம்பு நடிகரை வைத்து படம் பண்ணலாம் என்பது அவருடைய ஆசை. ஆனால், அவரைப் பத்தி இயக்குநர் விசாரித்துப் பார்த்ததில், ஒருத்தன் கூட உருப்படியாகச் சொல்லவில்லை. இருந்தாலும், வம்பு நடிகரை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார் இயக்குநர்.
“உங்களை வச்சி படம் பண்ண நான் ரெடி. ஆனால், எந்த விஷயத்திலும் நீங்க மூக்கை நுழைக்கக் கூடாது” என இயக்குநர் சொல்ல, ‘அதெப்படி? பாடல் ட்யூன்ல இருந்து, போஸ்டர் டிசைன் வரைக்கும் என்னோட அனுமதி இல்லாம போகக் கூடாது” என வம்பு நடிகர் சொல்ல, கேரளாவுக்கே மூட்டை கட்டிவிட்டாராம் இயக்குநர்.