Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

'காலா'வுக்கு வந்த முதல் பிரச்சனை!

Advertiesment
பிரபலங்களின் திரைப்படங்கள் என்றாலே டைட்டில் முதல் ரிலீஸ் வரை பிரச்சனைகள் வரும் என்பது கோலிவுட்டில் எழுதப்படாத ஒரு விதி. அதிலும் ரிலீசுக்கு ஒரு வாரம் முன்புதான் கோர்ட்டில் கேஸ் போட்டு பரபரப்பை ஏற்படுத்துவார்கள். இதெல்லாம் அந்த படங்களின் தயாரிப்பாளர்களிடம் இருந்து பணம் பறிக்க ஒரு வழி ஆகும்



 


இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'காலா' படத்திற்கு முதல் பிரச்சனை ஆரம்பமாகிவிட்டது. 'காலா' படத்தின் டைட்டிலை நான் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன், அது என்னுடைய டைட்டில் என்று ஒரு தயாரிப்பாளர் தற்போது கிளம்பியுள்ளார்.

முதலில் அந்த தயாரிப்பாளர் தனக்கு நீதி வேண்டும், நியாயம் வேண்டும் என்று போர்க்கொடி தூக்கியதாகவும், பின்னர் கடைசியில் வைட்டமின் M கொடுத்தால் போதும் என்று சமாதானம் ஆகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. 'காலா'வுக்கு இன்னும் என்னென்ன பிரச்சனைகள் வரப்போகிறது, எத்தனை பேர் கிளம்ப போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தாடி பாலாஜி-நித்யா பிரச்சனை. போலீசார் எடுத்த அதிரடி முடிவு