Publish Date: Wed, 04 Apr 2018 (15:24 IST)
Updated Date: Wed, 04 Apr 2018 (16:19 IST)
தன்னை வைத்து இரண்டு படங்களை இயக்கியவரைத் தளபதி கண்டு கொள்ளவில்லை என்கிறார்கள்.
பிரமாண்ட இயக்குநரிடம் உதவியாளராகப் பணியாற்றிய இளம் இயக்குநர், ‘கிங் குயின்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன்பிறகு தளபதியை வைத்து அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்கினார். அந்தப் படங்கள் எல்லாமே வேறு சில படங்களின் காப்பி என விமர்சனம் எழுந்தது.
இந்நிலையில், அடுத்தும் தளபதியை வைத்து இயக்கலாம் என்று ஆசைப்பட்டு அவரிடம் கதை சொல்லப் போயிருக்கிறார் இளம் இயக்குநர். ஆனால், ‘அப்புறம் பார்க்கலாம்…’ என்று சொன்ன தளபதி, இதுவரை அழைக்கவில்லையாம். எனவே தான் தெலுங்கில் படம் இயக்கப் போகிறார் இளம் இயக்குநர் என்கிறார்கள்.